II


மாமனாகவந்து வழக்குரைத்த படலம்325



     அகன்ற என வருவிக்க. தாளில் வீழ்ந்தார் என இயையும். தாம, மற்று
என்பன அசைகள். கண்ணீர் பெருக விடுத்தமையைத் தடங்கணீராட்ட
என்றும், கண்ணீர் வெள்ளத் தாழ்த்தி என்றும் கூறினார். (24)

ஐம்படை மார்பிற் காணேன் சிறுசிலம் படியிற் காணேன்
மொய்ம்படை மதாணி காணேன் முகத்தசை சுட்டி காணேன்
மின்படு குழைகள் காணேன் வெற்றுடல் கண்டே னப்பா
என்பெறு மென்று பிள்ளைப் பணிகளுங் கவர்ந்தா ரென்னா.

     (இ - ள்.) மார்பில் ஐம்படை காணேன் - மார்பின்கண் ஐம்படை
யென்னும் அணியைக் கண்டிலேன்; அடியில் சிறு சிலம்பு காணேன் -
காலின்கண் சிறிய சிலம்பினை கண்டிலேன்; மொய்ம்பு இடை மதாணி
காணேன் - தோளின்கண் தோளணியைக் கண்டிலேன்; முகத்து அசை சுட்டி
காணேன் - முகத்தின் கண் அசையும் சுட்டியைக் கண்டிலேன்; மின்படு
குழைகள் காணேன் - (காதுகளில்) ஒளி வீசுங் குண்டலங்களைக் கண்டிலேன்;
வெற்று உடல் கண்டேன் - (பின் இவை நீங்கிய) வெறும் உடலைக் கண்டேன்;
அப்பா - அப்பனே, என் பெறும் என்று - எத்துணை விலை பெறுமென்று
கருதி, பிள்ளைப் பணிகளும் கவர்ந்தார் என்னா - குழந்தையின்
அணிகளையும் வௌவினார் என்று கூறி.

     ஐம்படை - காவற் கடவுளாகிய திருமாலின் சக்கரம், தனு, வாள்,
தண்டு, சங்கம் என்னும் பஞ்சாயுதங்களின் உருவமைக்கப் பெற்றதோர்
அணி; குழந்தைகட்குக் காவலாக ஐந்தாவது திங்களில் இதனைத் தரிப்பது
மரபென்பர்; இது தாலி எனவும், ஐம்படைத் தாலி எனவும் வழங்கப் பெறும்;

"தாலி களைந்தன்று மிலனே பால்விட்டு
அயினியு மின்றயின் றனனே"

எனப் புறப்பாட்டிலும்,

"அமளித் துஞ்சு மைம்படைத் தாலிக்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்"

என மணிமேகலையிலும்,

"தாலி யைம்படை தழுவு மார்பிடை
மாலை வாயமு தொழுகு மக்களை"

என இராமாயணத்திலும் வருதல் காண்க. மதாணி - ஈண்டுத் தோள் வளை.
சுட்டி - உச்சியிலணிந்து முகத்திற்றொங்கும் அணி. அப்பா : மரபு
வழுவமைதி; இரக்கத்தில் வந்ததுமாம். (25)

அனைவரு மிரங்க வாய்விட் டழுதவ ரிளையா டன்னைத்
தனையனைக் கண்ணீர் மாற்றித் தடக்கையான் முதுகு தைவந்
தினையன்மி னென்மு வேறொன் றெண்ணன்மி னெண்ணா                                             வஞ்ச*
வினைஞர்வல் வழக்குச் சோர்ந்து விடுவதுங் காண்மி னென்னா.

     (பா - ம்.) * என்னா வஞ்ச.