II


326திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) அவர் - அவ்வணிகேசர், அனைவரும் இரங்க வாய்விட்டு
அழுது - கண்டாரெல்லாரும் மனமிரங்கும்படி வாய்விட்டழுது, இளையாள்
தன்னைத் தனையனை - தங்கையையும் புதல்வனையும், கண் நீர் மாற்றி -
கண்ணீரைத் துடைத்து, தடக்கையால் முதுகு தைவந்து - நீண்ட கையினால்
முதுகினைத் தடவி, இனையன்மின் - வருந்தாதீர்கள் - என்முன் வேறு ஒன்று
எண்ணன்மின் - என் முன்னே வேறொன்றினையும் கருதாதீர்கள்; எண்ணா
வஞ்ச வினைஞர் - (நான் வருவேனென்று சிறிதும்) நினையாத வஞ்சத்
தொழிலையுடைய ஞாதிகளின், வல் வழக்குச் சோர்ந்து விடுவது காண்மின்
என்னா - கொடு வழக்குத் தோற்றுவிடுவதைக் காணுங்கள் என்றும்.

     எண்ணும்மை விரிக்க. கண்ணீர் மாற்றி, முதுகு தைவந்து என்பன ஒரு
சொன்னீரவாய் இரண்டாவதற்கு முடிபாயின. தனையனை நோக்கி என ஒரு
சொல் வருவித் துரைத்தலுமாம். தைவரல் - தடவுதல். வேறொன்
றெண்ணன்மின் என்பதற்கு இத்துணை நாள் உங்களை விடுத்து
மறந்திருந்தேன்என நினையன்மின் என்றேனும். இவ்வழக்குத் தோற்றுவிடுமோ
என நினையன்மின் என்றேனும் கருத்துக் கொள்க. எண்ணா -
அறத்தினியல்பைச் சிறிதும் நினையாத என்றுமாம். (26)

நட்பிடை வஞ்சஞ் செய்து நம்பினார்க் கூன்மா றாட்டத்*
துட்படக் கவர்ந்து மேற்றோர்க் கிம்மியு முதவா ராயும்
வட்டியின் மிதப்பக் கூறி வாங்கியுஞ் சிலர்போ லீட்டப்
பட்டதோ வறத்தா றீட்டு நம்பொருள் படுமோ வென்னா.

     (இ - ள்.) நட்பு இடை வஞ்சம் செய்தும் - நண்பர் மாட்டும் வஞ்சனை
புரிந்தும், நம்பினார்க்கு ஊன் மாறாட்டத்து உட்படக் கவர்ந்தும் - நம்பிப்
பொருளை வைத்தவர்க்கு உயிர் மயங்குமாறு அப்பொருளைக் கவர்ந்தும்,
ஏற்றோர்க்கு இம்மியும் உதவாராயும் - இரந்தவர்க்கு இம்மியளவுங்
கொடாதவராயும், வட்டியில் மிதப்பக் கூறி வாங்கியும் - வட்டியில்
வரம்பின்றிச் சொல்லி அங்ஙனமே வாங்கியும், சிலர் போல் ஈட்டப்பட்டதோ
- சிலர் தேடுதல் போலத் தேடப்பட்டதோ (அன்று); அறத்து ஆறு ஈட்டும்
நம் பொருள் படுமோ என்னா - அற நெறியால் ஈட்டிய நமது பொருள்
அழியுமோ என்றும் கூறி (ப்பின்பு).

     நட்பிடை வஞ்சஞ் செய்தல் - நண்பர் பொருளைக் கவர்ந்து
கொள்ளுதல். ஊன், உயிருக்கு ஆகுபெயர். மாறாட்டம் - தடுமாற்றம்;
மயக்கம். நம்பி வைத்தார் பொருளைக கவர்ந்த ஞான்று அவர்
தடுமாற்றமடைதல் இயற்கை. ஊண் மாறாட்டத்துட்பட என்னும் பாடத்திற்கு
நஞ்சு முதலிய கலந்த உணவால் மயங்கச் செய்து என்பது பொருள். இம்மி -
மத்தங்காய்ப் புல்லரிசி; ஒரு சிற்றெண்ணுமாம்;

"இம்மியரிசித் துணையானும்"

என்பது நாலடி;

"இம்மியன நுண்பொருள்க ளீட்டி"

     (பா - ம்.) * ஊண் மாறாட்டத்.