என்னும் சிந்தாமணிச்
செய்யுளின் உரையும் நோக்குக. தீ நெறியானும்
அறமின்றியும் அங்ஙனம் ஈட்டப்பட்டதாயின் அழிதல் கூடும் என்றவாறாயிற்று.
(27)
மங்கல மாட
மோங்கு மதுரைநா யகனை நோக்கிச்
செங்கரஞ் சிரமேற் கூப்பி மாணிக்கந் தேற்றி விற்கும்
எங்குல வணிக ரேறே யெம்மனோர் வழக்கை யிந்தப்
புங்கவ ரிடனாத் தீர்த்துத் தருகெனப் புலம்பி யார்த்தார். |
(இ
- ள்.) மங்கல மாடம் ஓங்கும் மதுரை நாயகனை நோக்கி -
மங்கலம் நிறைந்த மாடங்கள் ஓங்கிய மதுரை நாயகனாகிய சோம சுந்தரக்
கடவுளை நோக்கி, செங்கரம் சிரம் மேல் கூப்பி - சிவந்த திருக்கரங்களைத்
திருமுடிமேற் குவித்து, மாணிக்கம் தேற்றி விற்கும் எம் குல வணிகர் ஏறே -
மாணிக்கங்களின் இலக்கணங்களைத் தெளிவித்து விற்றருளிய எமது வணிகர்
குலச் சிங்கமே, எம்மனோர் வழக்கை - எங்கள் வழக்கை, இந்தப் புங்கவர்
இடனாத் தீர்த்துத் தருக எனப் புலம்பி ஆர்த்தார் - இந்த அற மன்றத்தவர்
வாயிலாகத் தீர்த்து எமது பொருளைத் தருக என்று புலம்பி முறையிட்டார்.
நோக்கி
- எழுந்தருளியிருக்கும் திசையை நோக்கி. தேவரீர் எம்
வழக்குத் தீர்த்து அருள் புரிதற்கு உரிமையுடையீர் என்பார் 'எங்குல
வணிகரேறே' என்றார். புங்கவர் - உயர்ந்தோர். இடனா, வாயிலாக. தருகென :
அகரம் தொகுத்தல். (28)
ஆவலித் தழுத
கள்வர் வஞ்சரை வெகுண்டு நோக்கிக்
காவலன் செங்கோ னுண்ணூல் கட்டிய தருமத் தட்டில்
நாவெனுந் துலைநா விட்டெம் வழக்கையு நமராய் வந்த
மேவலர் வழக்குந் தூக்கித் தெரிகென விதந்து சொன்னார். |
(இ
- ள்.) ஆவலித்து அழுத கள்வர் - இங்ஙனம் அவலங் கொட்டி
அழுத பொய் வேடமுடைய இறைவர், வஞ்சரை வெகுண்டு நோக்கி -
கொடியராகிய ஞாதிகளைச் சினந்து பார்த்து (ப்பின்), காவலன் செங்கோல்
நுண்நூல் கட்டிய தருமத் தட்டில் - புரவலனது செங்கோலாகிய நுண்ணிய
நூலினால் யாத்த அறமாகிய தட்டின்கண், நா எனும் துலைநா இட்டு -
உங்கள்நாவாகிய துலைநாவை இட்டு, எம் வழக்கையும் - எமது
வழக்கையும், நமராய் வந்த மேவலர் வழக்கும் - எமது பங்காளிகளாய்
வந்த இப்பகைவர்களின் வழக்கையும், தூக்கித் தெரிக என - தூக்கி அறிவீர்
என்று, விதந்து சொன்னார் - (நூலோரை நோக்கித்) தெளிவுபடக்
கூறியருளினார்.
ஆவலித்தல்
- வாய் புடைத் தார்த்தல். அரசன் செங்கோலுக்கும்
அறத்திற்கும் பழுதுண்டாகாமல் நடுவு நிலையுடன் ஆராய்ந்து கூறுக என்பார்,
இங்ஙனம் உருவகப்படுத்திக் கூறினார்;
"சமன்செய்து
சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி" |
|