என்னும் குறள் இங்கே
சிந்திக்கற்பாலது. தெரிகென : தொகுத்தல். விதத்தல் -
வெளிப்படுத்தல். (29)
நரைமுது புலியன்
னான்சொற் கேட்டலு நடுங்கிச் சான்றோர்
இருவர்சொல் வழக்கு மேற்கொண் டநுவதித் திரண்டு நோக்கித்
தெரிவழி யிழுக்கு ஞாதி வழக்கெனச் செப்பக் கேட்டு
வெருவினர் தாயத் தார்கள் வலியரின் வேறு சொல்வார். |
(இ
- ள்.) நரைமுதுபுலி அன்னான் சொல் கேட்டலும் - நரைத்த முதிய புலியையொத்த
வணிகனது சொல்லைக் கேட்டவளவில், சான்றோர் நடுங்கி -
அறத்தவிசில் இருக்கும் பெரியோர் நடுங்கி, இருவர் சொல் வழக்கும் மேற்
கொண்டு - இரு திறத்தார் கூறுகின்ற வழக்கினையும் ஏற்றுக் கொண்டு,
அநுவதித்து இரண்டும் நேக்கித் தெரிவழி - அநுவாதஞ் செய்து இரண்டு
வழக்கினையுஞ் சீர் தூக்கி உண்மை தெரிந்த விடத்து, ஞாதி வழக்கு இழுக்கு
எனச் செப்ப - தாயத்தாரின் வழக்கு இழுக்குடைய தெனக்கூற, தாயத்தார்கள்
கேட்டு வெருவினர் - ஞாதிகள் அதனைக் கேட்டு அஞ்சி வலியரின் வேறு
சொல்வார் - அஞ்சாத வலியுடையார் போல வேறு சொல்வாராயினர்.
முதுமையும்
ஆண்மையும் உடைமையால் 'நரை முது புலியன்னான்'
என்றார். தாம் வழுவின்றியுரைக்க வேண்டமென்னும் அச்சத்தால் நடுங்கினர்
என்க. அநுவதித்தல் - முற்கூறியதனைப் பின்னும் எடுத்துரைத்தல். நோக்கித்
தெரிதல் - தடை விடைகளாற் கேட்டவற்றைச் சீர்தூக்கி ஊழான் உள்ளவா
றுணர்தல். அகத்தே வெருவினராயும் புறத்தே வெருவிலர் போலச் சொல்வார்
என்க. வெருவினர் : முற்றெச்சம். (30)
தவலருஞ் சிறப்பி
னான்ற தனபதி வணிக ரல்லர்
இவரென வவையங் கேட்ப விருகையும் புடைத்து நக்குக்
கவளமா னுரித்துப் போர்த்த கண்ணுதல் வணிகர் கோமான்
அவரவர் குடிப்பேர் பட்டங் காணிமற் றனைத்துங் கூறும். |
(இ
- ள்.) இவர் தவல் அருஞ்சிறப்பின் ஆன்ற தனபதி வணிகர்
அல்லர் என - இவர் கெடுதலில்லாத சிறப்பினால் நிறைந்த தனபதி வணிகர்
அல்லரென்று கூற, அவையம் கேட்க - அவையிலுள்ளார் கேட்குமாறு,
இருகையும் புடைத்து நக்கு - இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று தாக்கிச்
சிரித்து, கவள மான் உரித்துப் போர்த்த கண்ணுதல் வணிகர் கோமான் -
கவளமாகிய உணவினையுடைய யானையை உரித்துத் தோலைப் போர்த்த
சோம சுந்தரக் கடவுளாகிய வணிகர் தலைவன், அவர் அவர் குடிப்பேர்
பட்டம் காணி மற்று அனைத்தும் கூறும் - அவரவரின் குடிப்பெயரும்
பட்டமும் காணியும் பிற அனைத்துங் கூறி.
இவர்
அல்லரென்று ஞாதியர் கூற என்க. அவை : ஆகுபெயர்; அம் :
அசை. இவர் இங்ஙனம் முழுப்பொய் கூறியவாறென்னென்று கைகொட்டி
நக்கார். அவரவர் - ஞாதியர் எல்லாருடைய. குடிப்பேர் - கோத்திரப் பெயர்.
பட்டம் - சிறப்புப் பெயர். கூறும் என்பதனை எச்சமாக்குக. (31)
|