(இ
- ள்.) ஒரு விஞ்சை கற்றோர் - யாதானும் ஒரு வித்தையினைக்
கற்றோர், செல்லா உலகத்தினும் சென்று - போதற்கரிய உலகத்தினும் போய்,
பல்லாரும் நன்கு மதிக்கப் பயன் எய்துவார்கள் பலரும் நன்கு மதிக்க
(அவ்விஞ்சையைக் காட்டிப்) பயனடைவார்கள்; எல்லாம் அறிந்த எமக்கு
ஒன்றிலும் ஆசையில்லை - எல்லா விஞ்சைகளையும் உணர்ந்த எமக்கு
ஒன்றிலும் விருப்பம் இல்லை; கல்லானை கன்னல் கறிக்கின்றது காண்டி
என்றார் - கல்லானையானது ஈதோ கரும்பினைக் கடிக்கின்றதைக்
காண்பாய் என்றார்.
நன்கு
மதிக்கும்படி விஞ்சையைக் காட்டி என விரிக்க. காண்டி :
ஏவலொருமை; ட் : எழுத்துப்பேறு. (14)
கடைக்கண் சிறிதே குறித்தார்முன் கடாக்கல் யானை
மடைக்கண் டிறந்து மதமூன்றும் வழிய விண்வாய்
அடைக்கும் படிவாய் திறந்தார்த்துப் புழைக்கை நீட்டித்
தொடைக்குன்ற னான்கைச் சுவைத்தண்டைப் பறித்த தன்றே. |
(இ
- ள்.) சிறிது கடைக்கண் குறித்தார் முன் - சிறிது கடைக்கண்
வைத்தருளிய சித்தருக் கெதிரே, கடாக்கல் யானை - மதத்தினையுடைய
கல்யானையானது, மடைக்கண் திறந்து மத மூன்றும் வழிய - மடை போலக்
கண் திறந்து மூன்று மதங்களும் ஒழுக, வின்வாய் அடைக்கும் வடி வாய்
திறந்து ஆர்த்து - மேகத்தின் வாய் அடைக்குமாறு வாயைத் திறந்து
பிளிறிட்டு, புழைக்கை நீட்டி - தொளையினையுடைய துதிக்கையை நீட்டி,
தொடைக்குன்று அனான் கைச்சுவைத் தண்டைப் பறித்தது - மாலையை
யணிந்த மாலையை ஒத்த பாண்டியன் கையிலிருந்த கரும்பைப் பிடுங்கியது.
என்று
கூறிக் கடைக்கண் குறித்தார் முன் என்க. கடாக் கல்யானை
- கல்லானையாகிய மதயானை. இடியோசையும் கீழ்ப்பட ஆர்த்ததென்றார்.
தொடைக்குன்று அனான் : இல்பொருளுவமை. சுவைத்தண்டு - கரும்பு.
அன்று, ஏ : அசைகள். (15)
பறித்துக் கடைவாய் வழிசாறளி பாய்ந்து நக்கக்
கறித்துக் குதட்டிப் பருகிக்கர மூச லாட
நெறித்துத் தருக்கி நிழல்சீறி நிமிர்ந்து நிற்ப
மறித்துக் கடைக்கண் குறித்தார்பினு மாயம் வல்லார். |
(இ
- ள்.) பறித்து- அங்ஙனம் பிடுங்கி, கடைவாய் வழிசாறு அளி
பாய்ந்து நக்க - கடைவாயில் வழிகின்ற சாற்றினை வண்டுகள் மொய்த்துப்
பருகும்படி, கறித்துக் குதட்டிப் பருகி - கடித்து மென்று தின்று, கரம் ஊசல்
ஆட - துதிக்கை ஊஞ்சல்போல ஆடாநிற்க, நெறித்துத் தருக்கி நிழல் சீறி
நிமிர்ந்துநிற்ப - நெறித்துத் தருக்குற்று நிழலைச் சீறி நிமிர்ந்துநிற்க, பினும்
மாயம் வல்லார் - பின்னும் விஞ்சையில்வல்ல சித்தர், மறித்துக் கடைக்கண்
குறித்தார் - மீட்டும் கடைக் கண்ணாற் குறித்தருளினார்.
|