ஒவ்வொரு வார்த்தை
இட்டு - ஒவ்வொரு புகலைக் கூறிவிட்டு, வல் எழு
அனைய தோளார் அனைவரும் - வலிய தூணையொத்த தோளினையுடைய
ஞாதிகளனைவரும், வன்கால் தள்ள - வலிய காற்றுத் தள்ளுதலால், எழு
செல் முகில் போல் - எழுந்து சிதறியோடும் முகிலைப் போல, கூட்டம்
சிதைந்தனர் ஒளித்துப் போனார் - கூட்டங் கலைந்து ஒளித்துப் போயினர்.
ஒவ்வொருவரும்
தனித்தனி ஒவ்வொரு புகல் கூறிச் சென்றொளித்
தன ரென்க. எழு என்னும் முதனிலை எழுந்து என வினையெச்சப்
பொருட்டாயது. எழுந்து செல் முகில் என இயைக்க. சிதைந்தனர் :
முற்றெச்சம். (34)
அனையவர் போக நின்ற வறனவின் மன்றத் துள்ளோர்
தனபதி வணிகர் தந்த தனமெலாந் தத்த மைந்தற்
கெனமனை யெழுதி வாங்கி யீந்தன ரீந்த வெல்லை
மனமொழி கடந்த நாய்கர் மறைந்துதங் கோயில் புக்கார். |
(இ
- ள்.) அனையவர் போக - அங்ஙனம் அந்த ஞாதிகள்
மறைந்தொழிய, நின்ற அறன் நவில் மன்றத்து உள்ளோர் - அங்கிருந்த
அறங்கூறும் அவையிலுள்ளார், தனபதி வணிகர் தந்த தனம் எலாம் -
தனபதி வணிகர் முன் கொடுத்த பொருள் அனைத்தும், தத்த மைந்தற்கு
என - தத்துப் புதல்வனுக்கே உரியவென்று, மனை எழுதி வாங்கி ஈந்தனர் -
அவராற் சாதனம் எழுதி வாங்கிக் கொடுத்தனர்; ஈந்த எல்லை - அங்ஙனங்
கொடுத்தவளவில்; மனம் மொழிகடந்த நாய்கர் மறைந்து - உள்ளத்தையும்
உரையையும் கடந்த வணிகர் தமது திருவுருக் கரந்து, தம் கோயில் புக்கார்
- தமது திருக்கோயிலுட் புகுந்தருளினர்.
அறனவில்
மன்றம் - அறங்கூறவையம். மனை - சாதனம் என்னும்
பொருட்டு. முன் ஞாதியர் கைப்பற்றி யிருந்தமையால் மீட்டு எழுத
வேண்டிற்று. (35)
இம்மெனப் பலருங் காண மறைந்தவ ரிருந்தண் கூடற்
செம்மலென் றறிந்து நாய்கச் சிறுவனுக் குவகை தூங்க
விம்மித மடைந்து வேந்தன் வரிசைகள் வெறுப்ப* நல்கிக்
கைம்மறி வணிகர் கோயில் புதுக்கினான் கனகங் கொண்டு. |
(இ
- ள்.) இம்மெனப் பலரும் காண மறைந்தவர் - ஒல்லையில்
அனைவருங் காண மறைந்தருளியவர், இருந்தண் கூடல் செம்மல் என்று
வேந்தன் அறிந்து - பெரிய தண்ணிய கூடல் நாயகனாகிய சோம சுந்தரக்
கடவுள் என்று அரசன் அறிந்து, விம்மிதம் அடைந்து - வியப்புற்று, நாய்கச்
சிறுவனுக்கு - வணிக இளைஞனுக்கு, உவகை தூங்க - மகிழ்ச்சி மிக,
வரிசைகள் வெறுப்ப நல்கி - வரிசைகளை மிகக் கொடுத்து, கைம்மறி
வணிகர் கோயில் - கையில் மானையுடைய வணிகராய் வந்த இறைவன்
திருக்கோயிலை, கனகம் கொண்டு புதுக்கினான் - பொன்னினாலே
புதுப்பித்தான்.
(பா
- ம்.) * வரிசையுள் வெறுப்ப.
|