பருகி
- தின்றென்னும் பொருட்டு. நெறித்து - உடலை நெளித்து.
நிழலைச் சீறுதல் மதவேழததின் இயல்பு. மாயம் - விசித்திரச் செய்கை.
(16)
மட்டுற்ற
தாரான் கழுத்திற்கண்ட மாலை தன்னை
எட்டிப் பறித்த திகல்காஞ்சுகி மாக்கள் சீறிக்
கிட்டிக் களிற்றைப் புடைப்பான் கிளர்கோல்கொண்டோச்சச்
சிட்டத் தவர்கண் சிவந்தானையைச் சீறி நோக்க. |
(இ
- ள்.) மட்டு உற்ற தாரான் கழுத்தில் கண்ட மாலை தன்னை
எட்டிப் பறித்தது - மணமிக்க மாலையையணிந்த பாண்டியன் கழுத்திலுளள
(முத்தாலாகிய) கண்டமாலையை எட்டிப் பிடுங்கியது; இகல் காஞ்சுகி மாக்கள்
சீறி - (உடனே) மாறுபட்ட மெய்காவலர் சீற்றங்கொண்டு, களிற்றைப்
புடைப்பான் கிட்டிகோல் கொண்டு ஓச்ச - யானையை அடித்தற்கு நெருங்கிக்
கோலினைக் கொண்டு வீச, சிட்டத்தவர் கண் சிவந்து ஆனையைச் சீறி
நோக்க - சித்தமூர்த்திகள் கண் சிவந்து யானையைச் சினந்து பார்க்க.
கண்டமாலை
- கழுத்தணி; பெயர். இகல் - இகலிய. சிட்டராகிய தவர்
என்க; சிட்டர் மேலோர். ஓச்சினர் - ஓச்சிய வளவில் என விரித்துரைக்க. (17)
கண்டா வளியைக்*
களிறுண்டது கண்கள் சேப்புக்
கொண்டா னரசன் சிவயோகரிற் கோப மூளத்
தண்டா வரசன் றமருட்டறு கண்ணர் சீறி
வண்டா ரிதழி மறைத்தாரை யடிக்க வந்தார். |
(இ
- ள்.) களிறு கண்டாவளியை உண்டது - யானையானது கண்ட
மாலையை உண்டுவிட்டது; அரசன் கண்கள் சேப்புக் கொண்டான் - மன்னன்
கண்கள் சிவந்து, சிவயோகரில் கோபம் மூள - சிவயோக சித்தர்மீது கோபம்
மிக, தண்டா அரசன் தமருள் - நீங்காத அரசன் மெய் காப்பாளருள்,
தறுகண்ணர் சீறி - அஞ்சாமையையுடைய சிலர் சினந்து, வண் இதழித் தார்
மறைத் தாரை அடிக்க வந்தார் - செழுமையாகிய கொன்றை மாலையை
மறைத்துவந்த சித்திரை அடிக்கும் பொருட்டு நெருங்கி வந்தனர்.
கண்டவாளி
: வடமொழி நெடிற்சந்தி. ஆவலி - மாலை; ஆவளி
யெனத் திரியும். சேப்பு - சிவப்பு. கண்கள் சேப்புக் கொண்டான்.
சினைவினை முதன்மேல் நின்றது. கொண்டான் : முற்றெச்சம். கோபமூளக்
கொண்டான் என்றலுமாம். யோகரில் - யோகரிடத்து. தண்டாத தமர் என்க.
வண் இதழித்தார் என மாற்றுக; வண்டு மொய்த்த இதழி யென்றல்
சிறப்பின்று. (18)
(பா
- ம்.) * கண்டாவலி. +கண்கள் சேப்பக்.
|