II


வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலம்341



     புறகிட்டு - முதுகாட்டி; தோற்று. அணிமையிற் சென்று துரத்துதலை
'எட்டிப்பிடிப்பாரின் துரத்து மெல்லை' என்றார். (15)

எமையா மருச்சித் திருக்குந்தல மெய்து வாயால்
அமையா தவன்கட் பழியாற்றுது * மென்னச் சேற்கண்
உமையாண் மணாள னருள்வாழ்த்தி யுரக னுச்சிச்
சுமையாறு தோளான் றொழுதான்ற னிருக்கை புக்கான்.

     (இ - ள்.) எமையாம் அருச்சித்து இருக்கும் தலத்து எய்துவாய் -
எம்மை யாமே அருச்சித்து வழிபட்டிருக்குந் தலமாகிய திருவிடை மருதூரை
அடைவாய், அமையாதவன்கண் பழி ஆற்றுதும் என்ன - (அங்கு உனது)
தணியாத கொடிய பழியைத் தணிவிப்போமென்று கூறியருள, உரகன் உச்சிச்
சுமை ஆறு தோளான் - அனந்தன் முடிப்பொறை ஆறுதற்கேதுவாகிய
தோளையுடைய வரகுண வேந்தன், சேல்கண் உமையாள் மணாளன் அருள்
வாழ்த்தி - அங்கயற் கண்ணம்மையின் மணாளனாகிய சோம சுந்தரக்
கடவுளின் திருவருளை வாழ்த்தி, தொழுதான் - தொழுது, தன் இருக்கை
புக்கான் - தனது இருப்பிடஞ் சென்றனன்.

     சிவபெருமான் எல்லா ஆன்மாக்களும் தம்மை வழிபட்டுய்யுமாறு
மறையாதி நூல்களால் அருளிச் செய்தமையன்றித் தாமே அருச்சித்தும்
காட்டுவாராயினர். 'எமையாம் அருச்சித்திருக்கும்' என்பதனால்
அவ்விறைவனால் அருச்சிக்கத்தக்க வேறு தெய்வமின் றென்பது பெற்றாம்.
இறைவன் திருவிடைமருதூரில் தம்மைத் தாம் பூசித்த வரலாற்றை அத்தல்
புராணம் நோக்கியுணர்க. சுமையானாய வருத்தம் ஆறுதற்குக் காரணமாகிய
தோள் என்க. அவன் தலையாற் பொறுக்கும் புவிப்பொறை முழுதையும்
இவன் தோளாற் பொறுக்கின்றனன் என்றபடி. தொழுதான், முற்றெச்சம் :
ஆல் : அசை. (16)

ஆர்த்தார் முடியோன் சிலநாள்கழித் தாற்ற லேற்ற
போர்த்தாவு வேங்கைக் கொடித்தானை புடவி போர்ப்பப்
பேர்த்தார் கலிவந் தெனப்பேரிய மார்ப்பக் கன்னிப்
பார்த்தாம வேன்மீ னவனாட்டிற் படர்ந்த வெல்லை.

     (இ - ள்.) சில நாள் கழித்து - சில நாள் சென்ற பின், ஆர்த்தார்
முடியோன் - ஆத்திமாலையணிந்த முடியையுடைய சோழன், ஆற்றல் ஏற்ற
- வலிமை மிக்க, போர்த் தாவு வேங்கைக் கொடித்தானை - போரின்கண்
தாவுகின்ற புலிக் கொடியை உயர்த்திய தனது சேனையானது, புடவி போர்ப்ப
- புவியை மறைக்கும்படி, ஆர்கலி பேர்த்து வந்தென - கடல் நிலை
பெயர்ந்து வந்தாற்போல, பேர் இயம் ஆர்ப்ப - பெரிய முரசங்கள் ஒலிப்ப,
கன்னிப்பார் - கன்னி நாட்டினையுடைய, தாமவேல் மீனவன் நாட்டில் -
மாலையணிந்த வேற்படையேந்திய பாண்டியனது நாட்டின்கண், படர்ந்த
எல்லை - சென்ற பொழுது.


     (பா - ம்.) * பழிமாற்றுதும்.