பூசத் துறையிற் புகுந்தாடியப் பொன்னித் தென்சார்
வாசத் திடைமா மருதைப்பணி தற்கு வையைத்
தேசத் தவன்கீழ்த் திசைவாயில் கடந்து செல்லப்
பாசத் தளையும் பழியும்புற நின்ற வன்றே. |
(இ
- ள்.) வையைத் தேசத்தவன் - (அங்ஙனம் அடைந்த) வையையாறு
சூழ்ந்த பாண்டி நாட்டையுடைய வரகுண வேந்தன், பூசத் துறையில் புகுந்து
ஆடி - பூசத் துறையிற் சென்று நீராடி, அப்பொன்னித் தென்சார் -
அக்காவிரியின் தென் பக்கத்தில், வாசத்து மா இடை மருதைப் பணிதற்கு -
மணமிக்க பெருமை பொருந்திய திருவிடை மருதூர் இறைவனை
வணங்குதற்கு, கீழ்த் திசைவாசல் கடந்து செல்ல - கீழைத் திசை வாயிலைக்
கடந்து உள்ளே செல்ல, பாசத் தளையும் பழியும் புறம் நின்ற - பாச பந்தமும்
கொலைப் பாவமும் (உடன் செல்லாது) புறத்தே நின்றன.
பூசத்
துறை - தைமாதம் பூச நாளிலே மருதவாணர் தீர்த்தமாடும்
திருக்காவிரித்துறை; இதனை,
"பூசம் புகுந்தாடிப்
பொலிந்தழ காய
ஈச னுறைகின்ற இடைமரு தீதோ" |
எனத் திருஞான சம்பந்தப்பெருமானும்,
"ஈசனெம்பெரு
மானிடை மருதினில்
பூச நாம்புகு தும்புன லாடவே" |
எனத் திருநாவுக்கரசுகளும்
அருளிச் செய்தல் காண்க. வாசம் மருதுக்கு
அடை. எழுந்தருளியுள்ள என்றுமாம். அன்றும், ஏயும் அசைகள். (20)
சுருதிச் சுரும்பு புறஞ்சூழ்ந்து குழறத் தெய்வ
மருதிற் சிறந்த பெருந்தேனைக்கண் வாயங் காந்து
பருகிப் படிந்து தழல்வாய் வெண்ணெய்ப் பாவையொப்ப
உருகிச் செயலற் றுரையற்றுணர் வாகி நின்றான். |
(இ
- ள்.) சுருதிச் சுரும்பு புறம் சூழ்ந்து குழற - வேதமாகிய
வண்டுகள் புறத்திற் சூழ்ந்து ஒலிக்க, தெய்வமருதில் சிறந்த பெருந்தேனை -
தெய்வத் தன்மை பொருந்திய இடைமருதிற் சிறந்த பெருமையுடைய தேனை,
கண்வாய் அங்காத்து பருகி - கண்ணாகிய வாயைத் திறந்து பருகி, படிந்து -
அதிலே தோய்ந்து, தழல்வாய் வெண்ணெய்ப் பாவை ஒப்ப உருகி -
நெருப்பிற்பட்ட வெண்ணெயாலாகிய பாவை போல உருகி, செயல் அற்று
உரை அற்று உணர்வு ஆகி நின்றான் செயலும் சொல்லும் ஒழிந்து உணர்வு
வடிவாகி நின்றான்.
மருதடியில்
வீற்றிருக்கும் பெருமானை மருத மரத்தில் உள்ள தேனாக
உருவகப்படுத்தி, அதற்கேற்ப வேதத்தை வண்டாக உருவகித்தார். மரத்தின்
பொந்தில் தேன் இறால் வைப்பது காண்க. நினைத்தோறும் காண்டொறும்
|