II


344திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



பேசுந்தொறும் எப்பொழுதும் இன்பஞ் செய்வதாகலின் 'பெருந்தேன்' என்றார்.

"அந்த விடைமருதி லானந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ"

என்னும் திருவாசகமும்,

"மன்று ளாடுமது வின்னசை யாலே மறைச்சு
ரும்பறை புரத்தின் மருங்கே"

என்னும் பெரிய புராணச் செய்யுளும் இங்கே சிந்திக்கற்பாலன. தழல்வாய் வெண்ணெய்ப் பாவை உருகி உருத்தோன்றா தொழிதல் போல அன்பால்
உருகிக் கருவி கரணமெல்லாம் கெட்டு தற்போதமிழந்து நின்றானென்க.
பெருந்தேனை மிகப் பருகினனென்பது 'அங்காந்து பருகிப்படிந்து' என்னுஞ்
சொல்லாற்றலாற் பெறப்படும். தேனை மிகவுண்டார்க்கு உரைசெயல்
ஒழிதலாகிய நயமும் போற்றுக. சிவபெருமான் தாம் எழுந்தருளியிருக்கும்
திருப்பதிகளை உமாதேவியார்க்குக் காட்டிக் கொண்டு திருவிடை மருதூர்க்கு
நேரே வருகையில், திருக் கைலை அவரது பிரிவாற்றாது மருதமாகி அங்கு
நின்றதென்ப. (21)

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
நிராமய பரமா னந்த நிருத்தநான் மாடக் கூடற்
பராபர விமையா முக்கட் பகவபார்ப் பதிம ணாள
புராதன வகில நாத புண்ணிய மருத வாண
அராவணி சடையா வென்றென் றளவிலாத் துதிகள் செய்தான்.

     (இ - ள்.) நிராமய - நோயற்றவனே, பரம ஆனந்த நிருத்த -
பேரின்பத் திருக்கூத்தனே, நான் மாடக்கூடல் பராபர - நான்மாடக் கூடலில்
வீற்றிருக்கும் பராபரனே, இமையா முக்கண் பகவ - இமையாத மூன்று
கண்களையுடைய பகவனே, பார்ப்பதிமணாள - பார்வதி மணாளனே, புராதன
- பழமையானவனே, அகிலநாத - எல்லாவற்றுக்கும் இறைவனே, புண்ணிய -
அறவடிவனே, மருதவாண - இடைமருதில் வாழ்பவனே, அரா அணி சடையா
- பாம்பை அணிந்த சடையையுடையானே, என்று அளவு இலாத் துதிகள்
செய்தான் - என்று சொல்லிச் சொல்லி அளவிறந்த துதிகளைக் கூறினான்.

     நிராமயன் - பிறவி நோயில்லாதவன்; ஆமயம் - நோய். மதுரையில்
அருள்புரிந்த இறைவனே இப்பெருமான் என்று கொண்டு 'நான்மாடக் கூடற்
பராபர' என்றான். பகவன் - ஆறு குணங்களையுடையவன். (22)

சொற்பதங் கடந்த சோதி துதித்தடி பணிந்த வேந்தை
மற்பெருந் தோவாய் கீழை வாயிலிற் பிரம சாயை
நிற்பதந் நெறியாற் செல்லே னிழன்மதி யுரிஞ்சு மேலைப்
பொற்பெரு வாயி னீங்கிப் போதிநம் மதுரைக் கென்றான்.