அப்போ திளமூர லரும்பியச்சித்த
சாமி
கைப்போ தமைத்துக் கடிந்தோர்தமை நின்மி னென்ன
மைப்போ தகமன் னவர்வைத்தடி பேர்க்க லாற்றா
தொப்போ தரிய நிலையோவியம் போல நின்றார். |
(இ
- ள்.) அப்போது அச்சித்தசாமி - அங்ஙனம் வரும்பொழுது
அந்தச் சித்த மூர்த்திகள், இளமூரல் அரும்பி - புன்னகை புரிந்து, கடிந்தோர்
தமைக் கைப்போது அமைத்து நின்மின் என்ன - வெகுண்டு வந்தோரைக்
கைம்மலராலமைத்து நில்லுங்கள் என்று சொல்ல, மைப்போதகம் அன்னவர்
- கரிய யானையை ஒத்த அவ்வீரர்கள், வைத்த அடிபேர்க்கலாற்றாது -
வைத்த அடியைப் பெயர்க்க முடியாது, ஒப்பு ஓது அரிய நிலை
ஓவியம்போல நின்றார் - ஒப்புச் சொல்லுதற்கரிய நிலையினையுடைய
ஓவியம்போல நின்றார்கள்.
அமைத்து
நின்மினென்ன வென்க. தருக்குடைமையாற் போதக மன்னா
ரென்றார். வைத்த என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது. அரிய ஓவியம்
நிலை யோவியம் எனத் தனித்தனி கூட்டுக. நிலை - அசையாது நிற்றல். (19)
மத்தக் களிற்றான் வெகுளித்தழன் மாறி யன்பு
பொத்தப் புதைந்த மனத்தற்புதம் பொங்கிச் சோரச்
சித்தப் பெருமா னடிமாமுடி தீண்டப் பாச
பெத்தத் தமியேன் பிழையைப்பொறு மென்று வீழ்ந்தான். |
(இ
- ள்.) மத்தக்களிற்றான் - மத மயக்கத்தையுடைய யானையை
யுடைய பாண்டியன், வெகுளித் தழல்மாறி - சினத்தீ அவியப்பெற்று, அன்பு
பொத்தப் புதைந்த மனத்து அற்புதம் பொங்கிச் சோர - அன்பு மூடுதலாற்
புதைபட்ட மனத்தின்கண் வியப்பானது பொங்கி வழிய, சித்தப் பெருமான்
அடி மா முடிதீண்ட - சித்தசாமியின் திருவடிகள் தனது பெருமை
பொருந்திய முடியினைத் தீண்ட, பாச பெத்தத் தமியேன் பிழையைப்
பொறும் என்று வீழ்ந்தான் - பாசத்தாற் கட்டுண்ட ஏழையேன் பிழையைப்
பொறுத்தருளுமென்று வீழ்ந்து வணங்கினான்.
மத்தம்
- உன்மத்தம்; மத்தகமுமாம். சோர - சோராநிற்க. தீண்டுமாறு
வீழ்ந்தானென்க. பெத்தம் - கட்டுண்ட நிலைமை. (20)
அன்புக் கிரங்குங் கருணைக்கட லான வையர்
இன்புற்று வேண்டும் வரங்கேளெனத் தாழ்ந்து வேந்தன்
நன்புத் திரப்பே றருள்வாயென நல்கிச் செங்கை
வன்புற்ற வேழ மிசைவைத்தரு ணாட்டம் வைத்தார். |
(இ
- ள்.) அன்புக்கு இரங்கும் கருணைக் கடலான ஐயர் - அன்புக்கு
இரங்கும் அருட்கடலான பெருமான், இன்புற்று - மகிழ்ந்து, வேண்டும் வரம்
கேள் என - விரும்பிய வரத்தினைக் கேட்பாயாக என்று கூற, வேந்தன்
தாழ்ந்து - அபிடேக பாண்டியன் வணங்கி, நன் புத்திரப்பேறு அருள்வாய்
|