வரம்பின் மாதரார் மதுரவாய் திறந்துதேன் வாக்கும்*
நரம்பி னேழிசை யாழிசை நகைமலர்த் தருவின்
சுரும்பி னேரிசை நாரதர் தும்புரு+விசைக்கும்
இரும்பு நீர்மெழு காக்கிய வின்னிசை யெங்கும். |
(இ
- ள்.) வரம்பு இல் மாதரார் - அளவிறந்த மாதர்கள், மதுரவாய் திறந்து
- இனிய வாயினைத் திறந்து, தேன் வாக்கும் ஏழ் இசை - தேனைச்
சொரிவது போற் பாடும் ஏழிசைகளும், நரம்பின் யாழ் இசை -
நரம்புகளையுடைய யாழின் இசைகளும், நகை மலர்த் தருவின் -
விளங்குகின்றமலர்களையுடைய மரங்களில் உள்ள, சுரும்பின் ஏர் இசை -
வண்டுகளின் அழகிய இசையும், நாரதர் தும்புரு இசைக்கும் - நாரதரும்
தும்புருவும் பாடுகின்ற, இரும்பு நீர் மெழுகு ஆக்கிய இன் இசை -
இரும்பினை மெழுகு போல இளகுந் தன்மையாக்கிய இனிய இசையுமுள்ள,
எங்கும் - எல்லா விடங்களும்.
தேன்
வாக்கும் என்பதற்கேற்ப வாயை மலராக்குக. வாக்கும் ஏழிசையும்
நரம்பின் யாழிசையும் எனக் கூட்டுக; யாழுடன் கூடிய வாக்கும் இசை
என்றியைத்துரைத்தலுமாம். ஏழிசை முற்கூறப்பட்டமை காண்க. மெழுகு நீர்
என மாறுக. எங்கும் என்பதனை எல்லா இடங்களும் எனக் கொண்டு யாறு
முதலியவற்றோடு எண்ணுக. (34)
அமுத வாவியும் பொன்மல ரம்புயத் தடமுங்
குமுத வாயர மாதராங் குயிலினம் பயிலும்
நிமிர வாள்விடு மரகத நெடியபைங் காவுந்
திமிர மாசறக் கழுவிய தேவர்வாழ் பதமும். |
(இ
- ள்.) அமுத வாவியும் - அமிழ்த மயமான நீரினையுடைய
நடைக்கிணறும், பொன் அம்புய மலர்த்தடமும் - பொன் போன்ற தாமரை
மலர்கள் நிறைந்த தடாகங்களும், குமுதவாய் அரமாதர் ஆம் குயில் இனம்
பயிலும் - செவ்வல்லி மலர் போலும் வாயினையுடைய தேவ மகளிராகிய
குயிற் கூட்டங்கள் விளையாடும், நிமிரவாள் விடும் மரகதம் - நிரம்ப
ஒளிவிடும் மரகதம் போன்ற, நெடிய பைங்காவும் - நீண்ட பசிய
சோலைகளும், திமிரம் மாசு அறக் கழுவிய - இருளாகிய களங்கம் ஒழியுமாறு
கழுவிய, தேவர் வாழ் பதமும் - தேவர்கள் வாழ்கின்ற பதங்களும்.
வாவி
- நடைக் கிணறு, நிமிர - மிக. தேவர் ஒளி வடிவினராகலின்
'திமிர மாசறக் கழுவிய தேவர்' என்றார்; ஆணவ இருளுமாம். (35)
அலம்பு பாற்கடல்+போற்புறத்
தமுதநீ ரகழும்
பொலஞ்செய் ஞாயில்சூழ் புரிசையும் பொன்செய்கோ புரமும்
நலங்கொள் பூவியல் வீதியு நவமணி குயின்ற
துலங்கு மாளிகைப் பந்தியுஞ் சூளிகை நிரையும்.
|
(ப
- ம்.) * வார்க்கும், +நாரத தும்புரு. +அலங்கு பாற்கடல்.
|