II


வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலம்353



வடம்கொள் பூண்முலை உருத்திர மகளிரோடு அமரும் - முத்து வடமாகிய
அணியை அணிந்த கொங்கையையுடைய உருத்திர மகளிரோடு
பொருந்தியிருக்கும், இடம் பொள் மாளிகைப் பந்தியும் - இடம் பரந்த
மாளிகை வரிசைகளும், இகல் - பகையையும், விளை துன்பம் - பிறரால்
விளையுந் துன்பங்களையும், கடந்த செல்வமும் - நீங்கிய செல்வமும், கவலை
இல் போகமும் - கவலையின்றித் துய்க்கும் போகங்களும் ஆகிய இவை
அனைத்தையும், காட்டி - (தனித்தனி) காண்பித்து.

     ஏனை யுலகங்களில் உள்ள செல்வம் பகைமையுடனும் துன்பங்களுடனும்
பொருந்தியதும், போகம் கவலையுடன் கூடியதும் ஆம் ஆகலின் ஈண்டு
அவையொழிந்த செல்வமும் போகமும் என்றார். சிவபுரம் இது பார் எனப்
பணிந்து, அங்குள்ள இவற்றைத் தனித்தனி காட்டியென்க. (38)

முண்ட காசனன் பதமிது மூவுல களந்த
தண்டு ழாயவன் புரமிது தனிமுதல் வடிவங்
கொண்டு வீறுசா லுருத்திரர் கோப்பதி யின்ன
எண்டி சாமுகங் காவல ருறைவிட மிவைகாண்.

     (இ - ள்.) முண்டக ஆசனன் பதம் இது - தாமரைத் தவிசினையுடைய
பிரமன் வாழும் பதம் இதுவாகும்; மூவுலகு அளந்த தண் துழாயவன் புரம்
இது - மூன்றுலகங்களையும் அளந்த குளிர்ந்த துழாய் மாலையையுடைய
திருமாலின் பதி இதுவாகும்; தனி முதுல் வடிவம் கொண்டு - ஒப்பற்ற முதுற்
கடவுளாகிய சிவபெருமான் திருவுருவத்தைப் பெற்று, வீறு சால் உருத்திரர்
கோப்பதி இன்ன - பெருமை மிக்க உருத்திரர்களின் சிறந்த நகரங்கள் இவை;
எண் திசாமுகம் காவலர் உறைவிடம் இவை காண் - எட்டுத் திக்குகளையும்
காவல் செய்கின்ற திக்குப் பாலகர்களின் இருப்பிடங்கள் இவையாகும்.
முண்டகாசனன் : வடமொழி நெடிற் சந்தி. கோ - தலைமை; சிறப்பு.
திசாமுகம்- திசையின் இடம். காண், முன்னிலையசை; தனித் தனி கூட்டி,
காண்பாயாக என்றுரைத்தலுமாம்; வருஞ் செய்யுட்களிலும் இங்ஙனங் கொள்க.
(39)

புலரு முன்புன லாடிநீ றாடிநம் புனிதன்
இலகு மாலயம் விளக்கிநந் தனப்பணி யியற்றி
மலர்கொய் தாய்ந்தனர் தொடுத்தரன் புகழ்செவி மடுத்திவ்
வுலக வாணராய்ப் போகமுற் றுறைகுவ ரிவர்காண்.

     (இ - ள்.) புலருமுன் - விடிவதற்கு முன்னரே, புனல் ஆடி - நீராடி,
நீறு ஆடி - திருநீறு தரித்து, நம்புனிதன் இலகும் ஆலயம் விளக்கி - நமது
இறைவன் விளங்கும் திருக்கோயிலைத் திருவலகிட்டு நந்தனப் பணி இயற்றி -
திருநந்தனப்பணி செய்து, மலர் கொய்து ஆய்ந்தனர் தொடுத்து - மலரெடுத்து
ஆய்ந்து திருப்பள்ளித்தாமம் தொடுத்துச் சாத்தி, அரன் புகழ் செவி மடுத்து -
இறைவன் புகழைச் செவி நிரம்பக்