II


354திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



கேட்டு, இவ்வுலக வாணர் ஆய் - இவ்வுலகத்தில் வாழ்பவராய், போகம்
உற்று உறைகுவர் இவர்காண் - போகந்துய்த்திருப்போர் இவர்.

     ஆய்ந்தனர் : முற்றெச்சம். தாதமார்க்கமாகிய சரியை நெறியினின்று
சாலோக முற்றோர் இதிற் கூறப்பட்டனர். சரியையின் இயல்பினையும் பேற்றையும்,

"தாதமார்க்கஞ் சாற்றிற் சங்கரன்றன் கோயிற்
     றலமலகிட் டிலகுதிரு மெழுக்குஞ் சாத்திப்
போதுகளுங் கொய்து பூந்தார் மாலை கண்ணி
     புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்துபாடித்
தீதிறிரு விளக்கிட்டுத் திருநந்த வனமும்
     செய்துதிரு வேடங்கண் டாலடியேன் செய்வ
தியாதுபணி யீரென்று பணிந்தவர்தம் பணியும்
     இயற்றுவதிச் சரியைசெய்வோ ரீசனுல கிருப்பர்"

என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தால் அறிக. (40)

தூய ராகியைஞ் சுத்திசெய் தகம்புற மிரண்டின்
     நேய ராய்விதி நெறியினான் முகமனீ ரெட்டாற்
காயம் வாய்மன வொருமையா லர்ச்சித்துக் கடவுள்
     நாய னரரு குறைபத நண்ணினா ரிவர் காண்.

     (இ - ள்.) தூயர் ஆகி ஐஞ் சுத்தி செய்து - புனிதமுடையராய்
ஐவகைச் சுத்தி செய்து, அகம்புறம் இரண்டின் நேயராய் - உள்ளும் புறம்பும்
அன்புடையராய், விதி நெறியினால் - ஆகம நெறியினால், முகமன் ஈர்
எட்டால் - பதினாறு வகை உபசாரத்தாலும், காயம் வாய் மன ஒருமையால் -
உடல் உரை உள்ளமாகிய இம்மூன்றின் ஒருமைப்பாட்டுடன், அர்ச்சித்து -
பூசித்து, கடவுள் நாயனார் அருகு உறைபதம் நண்ணினார் இவர்காண் -
எல்லாத் தேவர்களுக்கும் இறைவனாகிய சிவபிரான் அணிமையில் உறையும்
பதத்தினை அடைந்தவர் இவர்.

     ஐஞ்சுத்தி - பூதசுத்தி, ஆன்ம சுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி,
இலிங்க சுத்தி என்பன. பூத சுத்தியாவது தத்துவங்களைச் சடமென்றறிதல்;
ஆன்ம சுத்தியாவது அவ்வாறறிதல் ஆன்ம போதத்தாலன்று, திருவருளா
லென்றுணர்தல்; திரவிய சுத்தியாவது ஆன்மா அறிவித்தாலன்றி அறியாதென
வுணர்ந்து கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் பொருள் முழுதும்
திருவருள் என்றுணர்தல்; மந்திர சுத்தியாவது திருவைந்தெழுத்தை முறைப்படி
மாறி யுச்சரித்து அதன் உண்மையை உணர்தல்; இலிங்க சுத்தியாவது
பதியாகிய சிவம் பசு பாசங்களின் பிரிவின்றி நின்று அவற்றைச்
சேட்டிப்பிக்குந் தன்மையை உணர்ந்து அச் சிவம் இலிங்கத்தினும்
எழுந்தருளியிருக்கு மேன்றுணர்தல். சரியை புறத்தொண்டும், கிரியை புறம்
அகம் இரண்டினும் செய்யுந் தொண்டும் ஆகலின் 'அகம்புற மிரண்டின்
நேயராய்' என்றார். முகமன் ஈரெட்டு - சோடச வுபசாரம். கடவுளர்க்கு