II


36திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



என - நன்மைவாய்ந்த புதல்வர்ப் பேற்றினை அளிப்பாயாக என்றுவேண்ட
நல்கி - (அங்ஙனமே) அருள் செய்து, வன்பு உற்ற வேழமிசை
செங்கைவைத்து அருள் நாட்டம் வைத்தான் - வலிமைமிக்க யானையின்
மேலே சிவந்த திருக்கையை வைத்து அருணோக்கம் வைத்தருளினான்.

     இரங்குதல் - எளிவருதல். (21)

            [கலி விருத்தம்]
தழைக்கு நீள்கதிர்த் தண்முத்த மாலையைப்
புழைக்கை நீட்டிக் கொடுத்தது போதகம்
மழைக்கை நீட்டினன் வாங்கின னீதியிற்
பிழைக்க லாத பெருந்தகை வேந்தனே.

     (இ - ள்.) போதகம் - யானையானது, புழைக்கை நீட்டி - தனது
தொளையுடைய துதிக்கையை நீட்டி, தழைக்கு நீள் கதிர் தண் முத்த
மாலையைக் கொடுத்தது - தழைக்கின்ற மிக்க ஒளியினையுடைய தண்ணிய
முத்துமாலையைக் கொடுத்தது; நீதியில் பிழைக்கலாத பெருந்தகை வேந்தன்
- நீதியினின்று தவறாத பெருந் தன்மையை யுடைய பாண்டி மன்னன்,
மழைக்கை நீட்டினன் வாங்கினன் - முகில் போலுங் கையினை நீட்டி
அதனை வாங்கினான்.

     கொடுக்குங் கையால் வாங்கின னென்பார் ‘மழைக்கை நீட்டினன்
வாங்கினன்’ என்றார். நீட்டினன் : முற்றெச்சம். நீதி - அரசாளு முறைமை.
பிழைக்கலாத : எதிர்மறைப் பெயரெச்சம்; குவ்வும் அல்லும் சாரியை; ஆ :
எதிர்மறை யிடைநிலை. (22)

முத்த மாலிகை வாங்குமுன் முன்னின்ற
சித்த சாமி திருவுருக் கண்டிலன்
மத்த யானை வடிவமு மேனைய
ஒத்த தாக வுரவோன் வெருவினான்.

     (இ - ள்.) முத்த மாலிகை வாங்கு முன் முன்நின்ற சித்தசாமி
திருவுருக் கண்டிலன் - அங்ஙனம் முத்து மாலையை வாங்குதற்கு முன்
எதிரே நின்றருளிய சித்த மூர்த்திகளின் திருவுருவத்தைங்க காணானாயினன்;
மத்தயானை வடிவமும் - மதமயக்கத்தினையுடைய யானையின் உருவமும்,
ஏனைய ஒத்ததாக - (அங்கு நின்ற) மற்றைய கல்லானைகளைப் போன்றதாக,
உரவோன் - வலியோனாகிய மன்னன். வெருவினான் - அஞ்சினான்.

     ஒத்ததாயிற்று; அங்ஙனமாகவே வெருவினான் என விரித்துரைக்க.
திருவுருவைக் காணாமலும் ஒத்ததாயினமை கண்டும் வெருவினான்.
வெருவுதலில்லாத மதுகை யுடையான் வெருவினான் என்றார். (23)

இந்த வாட லெமக்குயி ராயவிவ்
வந்த மில்லி யருள்விளை யாட்டெனா
முந்தை வேத முதல்வனை மீளவும்
வந்து வந்தனை செய்தனன் மன்னனே.