(இ
- ள்.) மதம் கவிழ்க்கும் மால்வரை முகம் மைந்தனும் - மதத்தைக்
கொட்டும் பெரிய மலை போன்ற யானையின் முகத்தையுடைய மூத்த
பிள்ளையாரும், சூரன் கவிழ்த்த வேல் கந்தனும் - சூரபன்மனது சினத்தை
அறக்கெடுத்த வேற்படையேந்திய முருகக் கடவுளும், கருதலன் வேள்வி
விதம் கவிழ்த்த வாள் வீரனும் - பகைவனாகிய தக்கன் வேள்வி வகையினை
அழித்த வாட்படையேந்திய வீரபத்திரக் கடவுளும், வெயில் முடித்தார் -
ஒளியினையுடைய முடியிலணிந்த மாலைகள், பதம் தேன் கவிழ்ப்ப -
செவ்வியுள்ள தேனைச் சிந்தும்படி, வீழ்ந்து ஏயின பணிவழி நிற்ப - வீழ்ந்து
வணங்கி ஏவின பணியின் வழியே நிற்கவும்.
மதங்கவிழ்க்கும்
என்ற அடையால் வரை யானையாயிற்று. கவிழ்த்த
வேல் என்க. பதம் - செவவி. ஏயின - ஏவின. (51)
தூங்கு தானையை யொதுக்கிவாய் துணைக்கரம் பொத்தி
ஓங்கு மாலயன் றங்குறை யொதுங்கிநின் றுரைப்ப
வாங்கு வான்சிலை யிந்திரன் முதற்றிசை வாணர்
தாங்க டாம்புரி காரியக் குறைநின்று சாற்ற. |
(இ
- ள்.) தூங்கு தானையை ஒதுக்கி - தொங்குகின்ற முன்னாடையை
ஒதுக்கி, வாய் துணைக்கரம் பொத்தி - வாயினை இரண்டு கைகளாலும்
பொத்தி, ஒதுங்கி நின்று - ஒரு புறமாக ஒதுங்கி நின்று, ஓங்கும் மால் அயன்
தம் குறை உரைப்ப - சிறந்த திருமாலும் அயனும் தங்கள் குறையினைக்
கூறவும், வாங்குவான் நிலை இந்திரன் முதல் திசை வாணர் - வளைந்த
வானவில்லையுடைய இந்திரன் முதலிய திசைக் காவலர்கள், நின்று - ஒரு
புறமாக நின்று, தாங்கள் புரி காரிய குறை சாற்ற - தாங்கள் புரிந்து வரும்
காரியங்களின் குறைகளைக் கூறவும்.
மாலயன்
ஒதுக்கிப் பொத்தி ஒதுங்கி நின்று குறை உரைப்ப என்க. தாம்
: அசை. (52)
எழுவி னோடுதண் டேந்திவாய் மென்றெயி றதுக்கிக்
குழுமு பாரிடத் தலைவருங் கோடிகூற் றொதுங்கி
விழும மூழ்கிமெய் பனித்திட விதிர்க்குமுக் குடுமிக்
கழுமு ளேந்திய கணத்தவர் கடைதொறுங் காப்ப. |
(இ
- ள்.) எழுவினோடு தண்டு ஏந்தி - வளைதடியையும்
தண்டத்தையும் ஏந்தி, வாய் மென்று எயிறு அதுக்கி - வாயினை
மென்று பற்களை அதுக்கி, குழுமு பாரிடத் தலைவரும் - கூடிய
பூதகணத் தலைவரும், கோடி கூற்று ஒதுங்கி - அளவிறந்த
கூற்றுவர்கள் ஒதுங்கி, விழுமம் மூழ்கி மெய் பனித்திட - துன்பத்துள்
முழுகி உடல் நடுங்க, விதிர்க்கும் - அசைக்கின்ற, முக்குடுமிக் கழுமுள்
ஏந்திய கணத்தவர் - மூன்று சிகையினையுடைய சூலப்படை ஏந்திய
சிவகணத் தலைவர்களும், கடைதொறும் காப்ப - வாயில்தோறும் காவல
பூண்டு நிற்கவும்.
|