பாரிடம்
- பூதகணம். கணத்தவரும் என எண்ணும்மை விரிக்க. (53)
சித்தர்
வானவர் தானவர் சாரணர் திணிதோள்
வைத்த யாழினர் கின்னரர் மாதவ ரியக்கர்
பைத்த பாரிடர் காருடர் பாதல வாணர்
சுத்த யோகியர் முதற்கணத் தொகையெலாம் பரவ. |
(இ
- ள்.) சித்தர் வானவர் தானவர் சாரணர் - சித்தரும் வானவரும்
அவுணரும், சாரணரும், திணிதோள் வைத்த யாழினர் - வலிய தோளின்கண்
வைத்த யாழினையுடைய விஞ்சையரும், கின்னரர் மாதவர் இயக்கர் -
கின்னரரும் மாதவரும் இயக்கரும், பைத்த பாரிடர் காருடர் - பரவிய பூத
கணத்தலைவரும் கருடரும், பாதல வாணர் - நாகரும், சுத்த யோகியர் முதல்
கணத் தொகை எலாம் பரவ - தூய சிவயோகியரும் முதலாகிய பல
கணங்களும் துதிக்கவும்.
பைத்த
- பரந்த என்னும் பொருட்டு. (54)
இனிவ ரும்பிறப்
பறுத்தெமைக் காத்தியா லெனத்தங்
கனிவ ரும்பிய வன்பெழு கருணையா ரமுதைப்
பனிவ ருந்தடங் கண்களாற் பருகிமெய் பனிப்ப
முனிவர் சங்கர சிவசிவ வெனமுறை முழங்க. |
(இ
- ள்.) இனி வரும் பிறப்பு அறுத்து - மேல் வரும் பிறப்பினை
வேரறுத்து, எமைக் காத்தி என - எங்களைக் காக்கக் கடவை என்று
வேண்டி, தம் கனிவு அரும்பிய அன்பு எழு கருணை ஆர் அமுதை -
தங்கள் கனிவு தோன்றிய அன்பின்கண் விளைந்த அருள் நிறைந்த
அமுதினை, பனி வரும் தடம் கண்களால் பருகி - ஆனந்த நீர்த்துளி
வருகின்ற பெரிய கண்களாகிய வாயாற் பருகி, மெய் பனிப்ப - உடல்
நடுங்க, முனிவர் சங்கர சிவ சிவ என முறை முழங்க - முனிவர்கள் சங்கர
சிவசிவ என்று முறையே முழங்கவும்.
அன்பெழு
கருணை யாரமுது என்ற கருத்தினை,
"அம்மையே யப்பா
வொப்பிலா மணியே
அன்பினில் விளைந்த வாரமுதே" |
என்னும் திருவாசகத்திற்
காண்க. ஆல் : அசை. (55)
வரந்த வாதன
யாவர்க்கும் வரன்முறை வழங்கி
முருந்த வாநகை* மலைக்கொடி முகிழ்நகை யரும்பத்
திருந்த வாயிரங் கதிர்விடு சிங்கமெல் லணைமேல்
இருந்த நாயக னிருக்கைகண் டிறைஞ்சினா னிறைவன். |
(பா
- ம்.) * முருந்த வாணகை.
|