மதுரையாக. சுந்தர மூர்த்தி
- சோம சுந்தரக் கடவுள், பிராட்டியும் தானும் - உமையம்மையும் தானும், முன்பு இருந்தவாறு
இருந்தனன் - முன்பு இருந்தது போலவே இருந்தருளினன்.
தன்னவாக்குதல்
- விடயங்களிற் செல்லாது தனக்கு அடங்கியிருக்கச் செய்தல். ஆக என்பது ஈறு தொக்கது.
பிராட்டியும் தானும் இருந்தனன் என்றது வழுவமைதி; "தானுந்தன் றையலும் தாழ்சடையோ னாண்டிலனேல்"
என்புழிப் போல. (58)
வேந்தர் சேகரன் வரகுணன் விண்ணிழி கோயில்
ஏந்தல் சேவடி யிறைஞ்சிநின் றிறையருட் பெருமை
ஆய்ந்த வாவுதன் னகம்புக வின்பமோ டன்பு
தோய்ந்து தாரைநீர் துளும்பநாக் குழறிடத் துதிப்பான். |
(இ
- ள்.) வேந்தர் சேகரன் வரகுணன் - மன்னர்கட்கு ஒரு முடி போல்பவனாகிய
வரகுண பாண்டியன், விண் இழி கோயில் ஏந்தல் சேவடி இறைஞ்சி - வானினின்றும் இறங்கிய
இந்திர விமானத்தின்கண் வீற்றிருக்கும் சோம சுந்தரக் கடவுளின் சிவந்த திருவடிகளைப்
பணிந்து, நின்று - திருமுன் நின்று, இறை அருள் பெருமை - இறைவனது திருவருட் பெருக்கம்,
ஆய்ந்து அவாவு தன் அகம்புக - ஆராய்ந்து விரும்பும் தனது உள்ளத்திற் புகுந்த வளவில்,
இன்பமோடு அன்பு தோய்ந்து - பேரின்பத்திலும் அன்பினும் அழுந்தி, தாரை நீர் துளும்ப
- கண்களில் ஆனந்த நீர் ததும்பவும், நாக்குழறிட - நாவானது குழறவும், துதிப்பான் -
பரவுவானாயினான்.
அவன்
கண்ட காட்சியும் எய்திய இன்பமும் கனவுபோல் உள்ள்ததிற்றோன்ற அதனை ஆராய்ந்தவிடத்து
இறைவனது திருவருட் பெருமை புலனாயினமையின் துதிப்பானாயினான் என்க. (59)
[கொச்சகக்
கலிப்பா]
|
நாயினே
னென்னை* நடுக்கும் பழியகற்றித்
தாயினே ராகித் தலையளித்தாய் தாள்சரணஞ்
சேயினேன் காணச் சிவலோகங் காட்டிப்பின்
கோயினேர் நின்றவருட் குன்றேநின் றாள்சரணம். |
(இ
- ள்.) நாயினேன் என்னை - நாய் போன்ற அடியேனை, நடுக்கும் பழி அகற்றி
- வருத்துகின்ற கொலைப் பாவத்தினின்றும் நீக்கி, தாயின் நேராகி - தாயே போன்று,
தலையளித்தாய் தாள் சரணம் - தலையளி செய்து ஆண்டவனே நின் திருவடிகட்கு வணக்கம்;
சேயினேன் காண - நின் திருவருளுக்குச் சேய்மையிலுள்ள யானுங் கண்டுகளிக்க, சிவலோகங்
காட்டி
- சிவபுரத்தைக் காண்பித்தருளி, பின் - பின்னர், கோயில் நேர் நின்ற -
(பா
- ம்.) * நாயினேன் றன்னை.
|