II


364திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



திருக்கோயிலில் என்னெதிரே நின்றருளிய, அருள் குன்றே - கருணை
மலையே. நின்தாள் சரணம் - நின் திருவடிகளுக்கு வணக்கம்.

"பானினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து"

என்ற திருவாசகம் இங்கே சிந்திக்கற் பாலது. சேய்மை - தூரம். (60)

மாழாந்து செய்யும் வினைவழிபோய் வன்னரகிற்
றாழா தடியனேற் கன்புந்தாய் தாள்சரணம்
ஏழாகி நான்கு வகையா யெழுபிறப்பும்
பாழாக வென்னைப் பணிகொண்டாய் தாள்சரணம்.

     (இ - ள்.) மாழாந்து செய்யும் வினை வழிபோய் - மயங்கிச் செய்கின்ற
வினையின் வழியே சென்று, வல் நரகில் தாழாது - கொடிய நரகத்தில்
அழுந்தாத வண்ணம், அடியனேற்கு அன்பு தந்தாய் - அடியேனுக்கு
அன்பினையளித்தவனே, தாள் சரணம் - நின் திருவடிகளுக்கு வணக்கம்; ஏழு
ஆகி நான்கு வகையாய் எழு பிறப்பும் பாழாக - ஏழு வகைப்பட்டு
நால்வகைத் தோற்றமாக வாரா நின்ற பிறவிகள் அனைத்தும் பாழ்பட,
என்னைப் பணி கொண்டாய் தாள் சரணம் - அடியேனை ஏவல்
கொண்டவனே நின் திருவடிகட்கு வணக்கம்.

     ஏழு - தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்
என்பன. நான்கு வகை - அண்டசம், சுவேதசம், உற்பிச்சம் சராயுசம் என்பன.
எழு - எழுகின்ற; உண்டாகின்ற. (61)

வெங்கட் பழியின் வினையேனை வேறாக்கித்
திங்கட் குலக்களங்கந் தீர்த்தாய்நின் றாள்சரணம்
அங்கட் சிவபுரமுண் டன்புடையார்க் கென்பதையின்
றெங்கட்குக் காட்டி யிசைவித்தாய் தாள்சரணம்.

     (இ - ள்.) வினையேனை - தீவினையுடைய என்னை, வெங்கண்
பழியின் வேறு ஆக்கி - கொடிய பழியினின்றும் வேறுபடுத்தி, திங்கள் குலக்
களங்கம் தீர்த்தாய் - சந்திர குலத்திற்கு வந்த மறுவைத் தொலைத்தவனே,
நின் தாள் சரணம் - நின் திருவடிகளுக்கு வணக்கம்; அன்பு உடையார்க்கு
அங்கண் சிவபுரம் உண்டு என்பதை - அன்புடையார்களுக்கு அழகிய
இடத்தையுடைய சிவலோகம் உண்டு என்று நூல் கூறுவதை, இன்று -
இப்பொழுது, எங்கட்குக் காட்டி இசைவித்தாய் - அடியேங்களுக்குக்
காண்பித்து இசையச் செய்தவனே, தாள் சரணம் - நின் திருவடிகட்கு
வணக்கம்.

     தானுற்ற பழியால் தனது குலத்திற்கே களங்கமுண்டாகுமெனக்
கருதினானாகலின் 'திங்கட்குலக் களங்கம் தீர்த்தாய்' என்றான். அங்கண்
என்பதற்கு அவ்விடம் என்றும், மறுமை என்றும் உரைத்தலுமாம். ஆகம
வளவையால் அறியப்படுவதைக் காட்சியளவையானும் அறியச் செய்தாய்
என்றனனென்க. (62)