என்பு தோன்றியூ னின்றியே யிளைத்தயாக் கையராய்
அன்பு தோன்றியே கண்டவ ரகங்கனிந் திரங்க
வன்பு தோன்றிய மனமொழி கடந்ததாண் மலர்பார்
முன்பு தோன்றிய தவத்தினான் முடிமிசைச்* சூட. |
(இ
- ள்.) என்பு தோன்றி - எலும்புகள் வெளிப்பட்டு, ஊன் இன்றி
இளைத்த யாக்கையராய் - தசை சிறிதுமின்றி இளைத்த உடம்பினை
யுடையராய், அன்பு தோன்றியே கண்டவர் அகம் கனிந்து இரங்க -
பார்த்தவர்கள் அன்பு மிக்கு மனங் கனிந்திரங்க, வன்பு தோன்றிய மனம்
மொழி கடந்த தாள் மலர் - கடினமான மனத்தையும் மொழியையுங் கடந்த
திருவடித் தாமரைகளை, பார் - நிலமகள், முன்பு தோன்றிய தவத்தினால் -
முன்பு செய்த தவத்தினால், முடிமிசை சூட - தன் முடியின் கண்ணே சூட.
வன்பு
தோன்றிய - கடினம் பொருந்திய; அன்பால் உருகுதலில்லாத. (15)
திருமு கத்துவேர்
வரும்பவாய் குவிந்தொலி+செய்ய
வருவர் கற்சுமை தாங்கிமேற் சார்த்துவர் மடுநீர்
பருகு வாரெடுப் பார்தலை வெம்மைவேர் பறிய
இருகை யாலடிக் கடியெடுத் தேந்தியூர் புகுவார். |
(இ
- ள்.) திருமுகத்து வேர்வு அரும்ப - திருமுகத்தின்கண் வேர்வை
தோன்ற, வாய் குவிந்து ஒலி செய்ய - திருவாய் கூம்பி ஒலி செய்ய, வருவர் -
வாரா நிற்பர்; சுமை தாங்கி மேல் சார்த்துவர் - கல்லாலாகிய சுமை தாங்கி
மேல் சுமையைச் சார்த்தா நிற்பர்; மடு நீர் பருகுவார் - மடுவிலுள்ள நீரைக்
குடிப்பர்; எடுப்பார் - சுமையை எடுத்துத் தலையின்மேல் வைப்பர்; தலை
வெம்மை வேர் பறிய - தலையில் வெப்பத்தாலாகிய வேர்வை நீங்க, இரு
கையால் - இரண்டு திருக்கரங்களாலும், அடிக்கடி எடுத்து ஏந்தி ஊர் புகுவார் - அடிக்கடி
சுமையை மேலே எடுத்து ஏந்தி ஊருட் புகுவாராயினர்.
உடம்பாலுழந்து
தொழில் செய்வோர் களைப்புற்றபொழுது வாய் குவித்து
ஒலி செய்தல் இயற்கை, இச்செய்யுள் விறகு சுமப்பார் தொழிலினியல்பை
விளக்குதலின் தொழிற்றன்மையணி. (16)
நடந்து கொள்ளுநர்க் கறாவிலை பகர்ந்துநான் மாடம்
மிடைந்த வீதியுங் கவலையு முடுக்கரு மிடைந்து
தொடர்ந்த வேதமும் பிரமன்மால் சூழ்ச்சியும் பகலுங்
கடந்து போகியவ் விசைவலான் கடைத்தலைச் செல்வார். |
(பா
- ம்.) * முடிமிசை சூட. +குவித்தொலி.
|