ஏற்ற பயனளித்தும்
தான் அதனைக் கடந்து நின்றவன் என்றார்.
சோதனைத்தோ - சோதனை யகத்ததோ. நின்றாய் : பெயர். ஓகாரம்
எதிர்மறைப் பொருட்டு.
"ஆதி யானை
யமரர் தொழப்படும்
நீதி யானை நியம நெறிகளை
ஓதி யானை யுணர்தற் கரியதோர்
சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே" |
என்னும் தமிழ்மறை
இங்குச் சிந்திக்கற்பாலது. (26)
நின்னான் மொழிந்தமறை நின்னடிகள் வந்தித்தும்
பன்னா ளருச்சித்தும் பாதந் தலைசுமந்தும்
உன்னாமம் வாசித்து முன்னையறி யேனென்று
சொன்னா லடியனேன்* சோதனைத்தோ நின்னியல்பே. |
(இ
- ள்.) நின்னால் மொழிந்த மறை - நின்னாலே திருவாய் மலர்ந்
தருளப்பட்ட வேதமானது, நின் அடிகள் வந்தித்தும் - உன் திருவடிகளை
வணங்கியும், பல்நாள் அருச்சித்தும் - பலநாள் அருச்சனை புரிந்தும், பாதம்
தலை சுமந்தும் - உன் திருவடிகளைத் தலையிற் சுமந்தும், உன் நாமம்
வாசித்தும் - உன் திருப் பெயர்களைப் படித்தும், உன்னை அறியேன் என்று
சொன்னால் - உன்னை அறிகிலேன் என்று முறையிடு மாயின், நின் இயல்பு
அடியனேன் சோதனைத்தோ - அங்ஙனமாய நினது தன்மை அடியேனது
சோதனையில் அகப்படற் பாலதோ?
திருமறைக்
காட்டிலே மறை அருச்சித்து வந்தித்தமை கொள்க. பாதம்
தலை சுமத்தல் - பாதுகையா யிருந்து சுமத்தல். நாமம் வாசித்தல் - அவன்
திருப்பெயர்களையே கூறுதல். உன்னாலும் உன் பெருமை
உணர்தற்கரிதென்பார், நின்னால் மொழிந்த மறை உன்னை யறியேனென்று
சொன்னால் என்றார். வந்தித்தல் முதலிய ஒன்றுஞ் செய்யாத அடியேன்
என்க. மறை : சாரியொருமை. மறையும் என்னும் உம்மை தொக்கது.
(27)
[- வேறு]
|
பெரியதினும்
பெரியதுமாய்ச் சிறியதினுஞ் சிறியதுமாய்
அரியதினு மரியதுமா யெளியதினு மெளியதுமாய்க்
கரியதுமாய்க் காண்பானுங் காட்சியுமா யவைகடந்த
துரியமுமாய் நின்றாயென் சோதனைத்தோ நின்னியல்பே. |
(இ
- ள்.) பெரியதினும் பெரியதுமாய் - பெரியதினும் பெரிதாகியும்,
சிறியதினும் சிறியதுமாய் - சிறிதினும் சிறியதாகியும், அரியதினும் அரியதுமாய்
- அரிதினும் அரிதாகியும், எளியதினும் எளியதுமாய் -
(பா
- ம்.) * அடியேன்றன், அடியேனென்.
|