கற்குந்தொழில்
முற்றுப் பெறுமுன் என்னை நீக்கி விட்டனனென்க. (25)
வெவ்விற
கெறிந்து கட்டி விலைபகர்ந் தேனு மைய
இவ்வயி றோம்பு கேனென் றித்தொழில் பூண்டே னென்ன
நைவளந் தெரிந்த வேம நாதனும் விறகு மள்ளா
அவ்விசை யொருகா லின்னும் பாடென வையன் பாடும். |
(இ
- ள்.) ஐய - ஐயனே, வெவ்விறகு எறிந்து கட்டி விலை
பகர்ந்தேனும், உலர்ந்த விறகினை வெட்டிக் கட்டி விற்றாயினும், இவ்வயிறு
ஓம்புகேன் என்று - இந்த வயிற்றை ஓம்பக் கடவேனென்று கருதி, இத்
தொழில் பூண்டேன் என்ன - இந்தத் தொழிலை மேற்கொண்டேன் என்று
கூற, நைவளம் தெரிந்த ஏமநாதனும் - இசை நூலில் வல்ல அவ்வேமநாதனும்,
விறகு மள்ளா - விறகு விற்கும் மள்ளனே, அவ்விசை - முன் பாடிய அந்த
இசையை, இன்னும் ஒருகால் பாடு என - இன்னும் ஒரு முறை பாடுவாயாக
என்று கூற, ஐயன் பாடும் - இறைவன் பாடியருளுவான்.
இசையால்
வயிறோம்புதல் கூடாமையின் இத்தொழில் பூண்டேன்
என்றான். நைவளம் - நட்டபாடை என்னும் பண்; ஈண்டு இசைப்
பொதுமையை உணர்த்திற்று; சிறப்பாக நட்ட பாடையில் வல்லவன்
என்றுமாம். மள்ளர் என்னுஞ் சொல் பழைய நாளில் வீரரைக் குறித்து, பின்
உடற்றிண்மையுடைய ஏவன்மாக்களைக் குறிப்பதாயிற்று. (26)
குண்டுநீர் வறந்திட் டன்ன நெடுங்கொடிக் குறுங்காய்ப் பத்தர்த்
தண்டுநீ ணிறத்த நல்யா ழிடந்தழீஇத் தெறித்துத் தாக்கிக்
கண்டுமா டகந்தி ரித்துக் கௌவிய திவவிற் பாவ
விண்டுதே னொழுகிற் றென்ன வீக்கிமென் சுருதி கூட்டி. |
(இ
- ள்.) குண்டு நீர் வறந்திட்டன்ன - மடுவின் நீர் வறந்தாற்
போன்ற, நெடுங்கொடி குறுங்காய்ப் பத்தர் - நீண்ட கொடியிலுள்ள சிறிய
காயாகிய பத்தரமைந்த, தண்டு - கோட்டினையும், நீள் நிறத்த - மிக்க
நிறத்தினையுமுடைய, நல்யாழ் - நல்ல யாழினை, இடம்தழீஇ - இடது
பக்கத்தில் தழுவி, தெறித்துத் தாக்கிக் கண்டு - நரம்பை எறிந்து தாக்கி
(ப்பண்ணை எழுப்பி)ப் பார்த்து, மாடகம் திரித்து - முறுக்காணியைச் சுழற்றி,
திவவில் கௌவிய வீக்கி - வார்க்கட்டிலே கவ்வும்படி நரம்பைப் பிணித்து,
விண்டு தேன் ஒழுகிற்று என்னப் பாவ - இறாலினீங்கித் தேன் ஒழுகினாற்
போலப் பரவும்படி, மென்சுருதி கூட்டி - மென்மையாகச் சுருதியை எழுப்பி.
வறந்திட்டதன்ன
என்பது விகாரமாயிற்று. நீர் வறந்த குட்டம் போல்
எனக் கொள்க : குறுங்காய் - சுரைக்காய். உள்ளீடும் நீரும் வற்றிய
சுரைக்காய்க்கு நீர் வற்றிய குண்டு உவமம். நிறம் ஐந்து; அவற்றை,
|