விசையொடு தானந் தோறும் விரனடந் தூச லாட
இசைமுத லேழிற் பல்வே றின்னிசை யெழுஞ்சா தாரி
அசையொடு வீதிப் போக்கு முடுகிய லராகம் யார்க்கும்
நசைதரு நரம்பு கண்ட மொற்றுமை நயங்கொண் டார்ப்ப. |
(இ
- ள்.) தானந்தோறும் - சுரங்கள் எழும் தானங்கடோறும்,
விசையொடு விரல் கடந்து ஊசல் ஆட - விசையுடன் விரல் சென்று போக்கு
வரவு செய்ய, இசை முதல் ஏழில் - ஏழிசைகளுக்கும் முதலாயுள்ள ஏழு
சுரங்களில், பல்வேறு இன் இசை எழும் சாதாரி - பலவேறு வகைப்பட்ட
இனிய இசைகளில் ஒன்றாயெழுஞ் சாதாரிப் பண்ணினை, அசையொடு வீதிப்
போக்கு முடுகியல் அராகம் - அசையும் வீதிப் போக்கும் வண்ணமும்
திறமுமாகிய இவைகளால், யார்க்கும் நசைதரும் நரம்பு கண்டம் ஒற்றுமை
நயம் கொண்டு ஆர்ப்ப - எவருக்கும் விருப்பந் தரும் நரம்பின் ஒலியும்
மிடற்றின் ஒலியுந் தம்முள் வேறின்றி ஒலிக்க.
சாதாரி
- முல்லைப்பண்; இதனைத் தேவகாந்தாரம் என்பர். சாதாரி
பாடினார் என 32-ஆம் செய்யுளில் முடிக்க. அசை - தாள நான்கனுள் ஒன்று. வீதிப் போக்கு
- நகர முதலிய நாலெழுத்துக்கள் நேராய்ச் செல்லுதல்.
முடுகியல் - பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம் என்னும் ண்ணங்கள். அராகம் -
பாலை யாழ்த்திறம். (28)
வயிறது குழிய வாங்க லழுமுகங் காட்டல் வாங்குஞ்
செயிரறு புருவ மேறல் சிரநடுக் குறல்கண் ணாடல்
பயிரரு *மிடறு வீங்கல் பையென வாயங் காத்தல்
எயிறது காட்ட லின்ன வுடற்றொழிற் குற்ற மென்ப. |
(இ
- ள்.) வயிறு குழிய வாங்கல் - (பாடும்போது) வயிறு குழிபட
மேல் வாங்குதலும், அழுமுகம் காட்டல் - அழுமுகங் காட்டுதலும், வாங்கும்
செயிர் அறுபுருவம் ஏறல் - வளைந்த குற்றமற்ற புருவம் மேலேறுதலும், சிரம்
நடுக்குறல் - தலை அசைத்தலும், கண் ஆடல் - கண் ஆடுதலும், பயிர்
அருமிடறு வீங்கல் - பாடுகின்ற அரியமிடறு வீங்குதலும், பை என வாய்
அங்காத்தல் - பையைப் போல வாய் திறத்தலும், எயிறு காட்டல் -
பற்களைக் காட்டுதலும், இன்ன - இவை போல்வன பிறவுமாகிய, உடல்
தொழில் குற்றம் - உடம்பின் தொழிற் குற்றங்களும்.
வயிறது
எயிறது என்பனவற்றில் அது பகுதிப் பொருள் விகுதி. பயிர் -
பாடுகின்ற. என்ப, அசை; உடற்றொழிற் குற்றம் என்பனவாகிய இவைகளும்
என்றுரைத்தலுமாம். இக் குற்றங்களின்றிப் பாட வேண்டுமென்பதனை,
"கருங்கொடிப்
புருவ மேறா கயனெடுங் கண்ணு மாடா
அருங்கடி மிடறும் விம்மா தணிமணி யெயிறுந் தோன்றா" |
என்னும் சிந்தாமணிச்
செய்யுளாலும்,
(பா
- ம்.) * பயிரறு. பயிறரு.
|