நிருத்தம் புரியும் அம்பலமாக
வீற்றிருந்தானன்! இது என்னே,
அகமும்
அரங்காக அதில் அமர்ந்தான் என்க. (34)
நீல வண்ணன் றேறா நிமலன்
ஆல வாயி லமர்ந்தா னென்னே
ஆல வாயா னலரில் வாசம்
போலென் னுளமும் புகுந்தா னென்னே. |
(இ
- ள்.) நீலவண்ணன் தேறா நிமலன் - நீல நிறத்தையுடைய
திருமாலானும் அறியப்படாத இறைவன், ஆல வாயில் அமர்ந்தான் என்னே -
திருவாலவாயின்கண் வீற்றிருந்தான் இது என்னே, ஆல வாயான் - அங்ஙனம்
திருவாலவாயிலமர்ந்த அவ்விறைவன், அலரில் வாசம் போல் - மலரில் மணம்
போல, என் உளமும் புகுந்தான் என்னே - எனது உள்ளத்தின் கண்ணும்
புகுந்தான், இது என்னே!
இம்மூன்று
செய்யுளிலும் மலரோனாலும் மறையாலும் மாலாலும்
அறியப்படாதவன் என இறைவன் பெருமை கூறி, அவன் எளிவந்த
தன்மையையும் விளக்கினமை காண்க. இந்நகர் பெயர்கள் கூறப்பட்டன.
என்னே, என்றது இங்ஙனம் பெரியனாய இறைவன் இத்துணையெளியனாகியது
என்ன வியப்பு என வியந்தபடி. சிந்தாமணியில்
இங்ஙனம் மூன்றாக வந்த
செய்யுட்களை'தாழிசைக்
கொச்சக வொருபோகுகள் கந்தருவ மார்க்கத்தான்
இடை மடக்கின' என நச்சினார்க்கினியர்
கூறினர். (35)
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
பாணர்தம்
பிரானைக் காப்பான் பருந்தொடு நிழல்போக்
கென்ன
யாணரம் பிசைபின் செல்ல விசைத்தவின் னிசைத்தே னண்ட
வாணர்தஞ் செவிக்கா லோடி மயிர்த்துளை வழியத் தேக்கி
யாணரின் னமுத வாக்கை யிசைமய மாக்கிற் றன்றே. |
(இ
- ள்.) பாணர் தம் பிரானைக் காப்பான் - பாணர்களின்
தலைவனாகிய பத்திரனைக் காத்தற் பொருட்டு, பருந்தொடு நிழல் போக்கு
என்ன - பருந்தினோடு அதன் நிழல் செல்லுதல் போல, யாழ் நரம்பு இசை
பின் செல்ல இசைத்த - வீணை நரம்பிலெழும் இசை பின்றொடரப்
பாடியருளிய, இன் இசைத்தேன் - இனிய இசையாகிய தேனானது, அண்ட
வாணர்தம் செவிக்கால் ஓடி - தேவர்களுடைய செவியாகிய காலின் வழியே
ஓடி, மயிர்த்துளை வழியத் தேக்கி - மயிர்த் துளைகளின் வழியே கசியுமாறு
நிரப்பி, யாணர் இன் அமுத ஆக்கை - அழகிய இனிய அமுத மயமாகிய
அவர்கள் உடலை, இசை மயம் ஆக்கிற்று - இசைமயமாகச் செய்தது.
காப்பான்,
வினையெச்சம். காப்பான் இசைத்த வென்க.
|