II


விறகுவிற்ற படலம்387



'பருந்து மதனிழலும் பாட்டு மெழாலும்
திருந்துதார்ச் சீவகற்கே சேர்ந்தன'

என்னும் சிந்தாமணிச் செய்யுளும், பருந்து பறக்கு மிடத்து முறையே
உயர்ந்து அந்நிலத்தின்கண் நின்று ஆய்ந்து பின்னும் அம்முறையே மேன்
மேல் உயர்கின்றார் போலப் பாட வேண்டுதலின் அஃது உவமையாயிற்று
என்னும் அதனுரையும் இங்கு நோக்கத் தக்கன. மிடற்றிசையை யாழிசை
தொடர்ந்து செல்லுதற்குப் பருந்தினிழலியக்கம் உவமை. யாணரம்பு, வாணர்
என்பன முறையே யாழ்நரம்பு, வாழ்நர் என்பவற்றின் மரூஉக்கள். தம்
இரண்டும் சாரியை. அன்று, ஏ அசைகள். (36)

தருக்களுஞ் சலியா முந்நீர்ச் சலதியுங் கலியா நீண்ட
பொருப்பிழி யருவிக் காலு நதிகளும் புரண்டு துள்ளா
அருட்கடல் விளைத்த கீத வின்னிசை யமுத மாந்தி
மருட்கெட வறிவன் றீட்டி வைத்தசித் திரமே யொத்த.

     (இ - ள்.) தருக்களும் சலியா - மரங்களும் அசையாவாய், முந்நீர்ச்
சலதியும் கலியா - மூன்று நீரினையுடைய கடல்களும் ஒலியாவாய், நீண்ட
பொருப்பு இழ அருவிக்காலும் - உயர்ந்த மலையினின்றும் இழியும்
அருவியாகிய கால்களும், நதிகளும் புரண்டு துள்ளா - ஆறுகளும் புரண்டு
துள்ளாவாய், மருள்கெட - மயக்கம் நீங்க, அருள் கடல் விளைத்த -
கருணைக் கடலாகிய இறைவன் பாடியருளிய, கீத இன் இசை அமுதம் மாந்தி
- இன்னிசைக் கீதமாகிய அமுதத்தைப் பருகி, அறிவன் - சிற்ப நூல் வல்லான்,
தீட்டி வைத்த சித்திரமே ஒத்த - எழுதி வைத்த சித்திரங்களையே
ஒத்திருந்தன.

     தருக்கள் முதலியன மாந்திச் சலித்தல் முதலியன செய்யாவாய்ச்
சித்திரமேயொத்த என வினை முடிக்க. மருள் - அறியாமையுமாம்.

"மருவியகால் விசைத்தசையா மரங்கண்மலர்ச் சினைசலியா
கருவரைவீ ழருவிகளுங் கான்யாறுங் கலித்தோடா
பெருமுகிலின் குலங்கள்புடை பெயர்வொழியப் புனல்சோரா
இருவிசும்பி னிடைமுழங்கா வெழுகடலு மிடைதுளும்பா"

என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுள் இங்கே நோக்கற்பாலது. (37)

வீணைகை வழுக்கிச் சோர்வார் சிலர்சிலர் விரன டாத்தும்
யாணரம் பெழாலுங் கண்டத் தெழாலும்வே றாக வேர்ப்பர் *
நாணமோ டுவகை துள்ள நாத்தலை +நடுங்கித் தங்கள்
மாணிழை யவர்மேல் வீழ்வார் விஞ்சையர் மயங்கிச் சில்லோர்.

     (பா - ம்.) * வேறாக வோர்ப்பார். +நாத்தல நடுங்கி.