II


கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்39



எளிதினும் எளியதாகியும், கரியதுமாய் - சான்றாகியும், காண்பானும்
காட்டிசயுமாய் - காண்பவனும் காட்டிசயுமாகியும், அவை கடந்த
துரியமுமாய் - அவற்றைக்கடந்த துரியமாகியும், நின்றாய் - நின்றவனே,
நின் இயல்பு என் சோதனைத்தோ - இங்ஙனமாய நினது தன்மை எனது
சோதனையில் அகப்படற்பாலதோ?

     பெரிதிற் பெரிதாதல் - அண்டமோரணுவாம் பெருமை கொள்ளுதல்;

"அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொது கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் றுன்னணுப் புரையச்
சிறியவாகப் பெரியோன்"

என்பது திருவாசகத் திருமறை. இவ்வாசிரியர், கடவுள் வாழ்த்திலே

"அண்டங்க ளெல்லா மணுவாக வணுக்க ளெல்லாம்
அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும்"

என்றமையும் காண்க. கரி - சான்று; அறிவித்து உடனிருந் தறிவது.
காண்பான் - அறிபவன் ஆன்மா. காட்சி - அறிவு.

"அறிவானுந் தானே யறிவிப்பான் றானே
அறிவா யறிகின்றான் றானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பா ராகாசம்
அப்பொருளுந் தானே யவன்"

என்னும் அம்மையார் திருவாக்கும் நோக்குக. உம்மைகள் மாற்றி
யுரைக்கப்பட்டன. (28)

[அறுசீரடியாசிரிய விருத்தம்]
என்றுபல முறைபழிச்சி மனையெய்தி விக்ரமனை யீன்று
                                     பன்னாட்
டொன்றுமுறை கோலோச்சி விக்கிரமன் சுவன்மிசைப்பர்
                                சுமத்திப் பாசம்
வென்றுகளைந் தருட்சித்த சாமிதிரு வருணோக்கால்
                               விளைபே ரின்ப
மன்றன்மது* வீழ்வண்டிற் கலந்திருந்தா னபிடேக மாறன்
                                    மன்னோ.

     (இ - ள்.) என்று பல முறை பழிச்சி - என்று பலமுறை துதித்து,
மனை எய்தி - தனது அரண்மனையை அடைந்து, விக்ரமனை ஈன்று -
விக்கிரமனென்னும் புதல்வனைப் பெற்று, பல் நாள் தொன்று முறை கோல்
ஓச்சி - பலநாள்வரை பழைய முறைப்படியே செங்கோலை நடத்தி,
விக்கிரமன் சுவல்மிசை பார் சுமத்தி - விக்கிரமனது தோளின் மேல்
நிலச்சுமையை ஏற்றி, பாசம் வென்று களைந்து - பாசத்தினை வென்று


      (பா - ம்.) * மன்றமது.