(இ
- ள்.) உலகின் வானோர் - வானுலகிலுள்ள தேவர்களும், மனிதர் - மனிதர்களும்,
புள் விலங்கு மற்றும் - பறவையும் விலங்கும் ஏனையவும்,
ஆழிய கரணம் எல்லாம் - இசையிற் பதிந்த மன முதலிய கரணங்கள்
அனைத்தும், அசைவு அற அடங்க - அசைவின்றி அடங்க, ஐயன் -
இறைவனது, ஏழ் இசை மயமே ஆகி இருந்தன - ஏழாகிய இசையின்
மயமேயாகி இருந்தன - (அங்ஙனமிருந்த தன்மை), உணர்ந்தோர் உள்ளம் -
மெய்யுணர்ந்தோரின் உள்ளம், ஊழிஇல் ஒருவன் தாள்புக்கு - இறுதியில்லாத
ஒருவனாகிய இறைவன் திருவடியின்கண் சென்று, ஒடுங்கிய தன்மை ஒத்த -
ஒடுங்கிய தன்மையை ஒத்தது.
வாழிய
: மங்கலப் பொருட்டாய அசைச்சொல். வானுலகினோர் எனப்
பிரித்துக் கூட்டுக; உலகங்களில் உள்ள எனப் பொதுப்படவுரைத்தலுமாம்.
ஆழிய - அழுந்திய. உணர்ந்தோர் - பரஞானத்தாலே பரத்தைத் தரிசித்தோர். உலகமெல்லாம்
ஒடுங்கிய ஊழியிலும் எஞ்சி நிற்கும் ஒருவனாகிய இறைவன்
என்றுமாம். ஒடுங்கிய தன்மை - சிவமேயான தன்மை. (44)
கண்ணிறை நுதலோன் சாம கண்டத்தி னெழுந்த முல்லைப்
பண்ணிறை தேவ கீதஞ் சராசர வுயிரும் பாரும்
விண்ணிறை திசைக ளெட்டும் விழுங்கித்தன் மயமே யாக்கி
உண்ணிறை யுயிரு மெய்யு முருக்கிய திசைவல் லானை. |
(இ
- ள்.) கண் நிறை நுதலோன் - கண் நிறைந்த நெற்றியையுடைய
சோம சுந்தரக் கடவுளின், சாம கண்டத்தின் எழுந்த - சாம வேதம் பாடுந்
திருமிடற்றினின்றும் எழுந்த, முல்லைப் பண் நிறை தேவ கீதம் -
சாதாரியாகிய நிறைந்த தேவகானமானது, சர அசர உயிரும் - இயங்குவனவும்
நிற்பனவுமாகிய உயிர்களையும். பாரும் - நிலவுலகத்தையும், விண் -
விண்ணுலகத்தையும், நிறை திசைகள் எட்டும் - நிறைந்த எட்டுத் :
திக்குகளையும், விழுங்கி தன் மயமே ஆக்கி - விழுங்கித் தன் மயமாகவே
செய்து, இசை வல்லானை உள் நிறை உயிரும் மெய்யும் உருக்கியது -
இசையில் வல்ல ஏமநாதனை உள்ளே நிறைந்த உயிரையும் உடலைம்
உருக்கியது.
வல்லானுடைய
உயிரையும் மெய்யையும் உருக்கியதென்க. (45)
[கலிநிலைத்துறை]
|
சிந்தை
தோயுமைம் பொறிகளுஞ் செவிகளாப் புலன்கள்
ஐந்து மோசையா விசைவலா னிருந்தன னாகப்
பந்த நான்மறை நாவினாற் பத்திர னாளாய்
வந்து பாடினா ரிந்தனச் சுமையொடு மறைந்தார். |
(இ
- ள்.) சிந்தை தோயும் ஐம்பொறிகளும் - மனத்துடன் பொருந்தும்
ஐம்பொறிகளும், செவிகளா - காதுகளாகவும், புலன்கள் ஐந்தும் -
ஐம்புலன்களும், ஓசையா - ஓசையாகவும், இசை வலான் இருந்தனனாக -
|