II


392திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



இசையில் வல்ல ஏமநாதன் இருந்தானாக; பந்தம் நான்மறை நாவினால் -
பந்த முதலிய உறுப்புக்களையுடைய நான்மறைகளைக் கூறியருளிய நாவினால்,
பத்திரன் ஆளாய் வந்து பாடினார் - பாணபத்திரன் அடிமையாக வந்து
பாடியருளிய இறைவர், இந்தனச் சுமையொடும் மறைந்தார் - விறகுச்
சுமையோடும் மறைந்தருளினார்.

     மனத்துடன் கூடாவிடத்துப் பொறிகள் உணராவாகலின் 'சிந்தை தோயும்
ஐம்பொறிகளும்' என்றார். ஐம்பொறிகளும் செவிகளாப் புலன்களைந்தும்
ஓசையா என்றது கண் முதலிய ஏனைப் பொறிகள் உருவம் முதலிய
புலன்களைச் சிறிதும் உணராதிருக்க என்றதன்றி, அவற்றின்
ஆற்றல்களையெல்லாம் செவியே கொண்டு அனைத்தையும் ஒடுக்கி நிற்கின்ற
ஓசையொன்றையே யுணர என்றதுமாயிற்று;

"ஐந்து பேரறிவுங் கண்களே கொள்ள"

என்னும் பெரிய புராணச் செய்யுள் இங்கே சிந்திக்கற்பாலது. பந்தம் - தளை;
வேதத்தின் உறுப்பு. பாடினார், பெயர். அவன் இசையொன்றையே உணர்ந்து
கொண்டிருந்தமையின் அவர் மறைந்த தன்மையையும் உணரானாயினான்
என்க. (46)

யான றிந்தசா தாரியன் றிம்பரு ளிதனை
நான றிந்ததென் றொருவரு நவின்றிலர் தேவ
கான மீதிவற் குணர்த்தினோன் கடவுளே யன்றி
ஏனை மானுடர் வல்லரோ விதுவியப் பென்னா.

    (இ - ள்.) யான் அறிந்த சாதாரி அன்று - (இது) யான் அறிந்த
சாதாரிப் பண் அன்று; இம்பருள் - இந்நிலவுலகில், நான் அறிந்தது என்று
ஒருவரும் இதனை நவின்றிலர் - என்னால் அறியப்பட்டது என்று
ஒருவரேனும் இதனைக் கூறிற்றிலர்; ஈது தேவகானம் - இது தேவ கானமாகும்
(ஆதலின்), இவற்கு உணர்த்தினோன் - இவனுக்கு இதனை அறிவித்தவன்,
கடவுளே அன்றி - கடவுளே அல்லாமல், ஏனை மானுடர் வல்லரோ - மற்றை
மனிதர்கள் அறிவிக்க வல்லரோ, இது வியப்பு என்னா - இது வியக்கத்தக்க
செய்தி என்று கூறி.

    ஒருவரும் தாம் அறிந்ததாகக் கூறிற்றிலர் என்க. மானுடனாகிய
பாணபத்திரனுடைய மாணாக்கனாகக் கூறினமையின் 'இது வியப்பு' என்றான்.
(47)

இழுக்கி விட்டவிக் கிழமக னிசையிதே லந்த
வழுக்கில் பத்திரன் பாடலெற் றோவென மதியா
அழுக்க முற்றெழுந் திசைவலா னடுத்ததன் பண்டர்
குழுக்க ளுங்குலை குலைந்திட விருள்வழிக் கொண்டான்.

    (இ - ள்.) இழுக்கிவிட்ட இக்கிழமகன் இசை இதேல் - நீக்கிவிடப்பட்ட
இம்முதியோன் இசை இதுவாயின், அந்த வழுக்கு இல் பத்திரன் - அந்தக்