குற்றமில்லாத பாணபத்திரனது,
பாடல் எற்றோ என மதியா - பாடல்
எத்தன்மைத்தோ என்று கருதி, அழுக்கம் உற்று - வருந்துதலுமுற்று,
இசைவவான் எழுந்து - இசையில் வல்ல ஏமநாதன் அவணின்றும் எழுந்து,
அடுத்த தன் பண்டர் குழுக்களும் குலை குலைந்திட - தன்னை அடுத்த
பாண் மக்களின் கூட்டங்களும் தலை தடுமாறிச் செல்ல, இருள் வழிக்
கொண்டான் - இரவிலேயே ஓடத் தலைப்பட்டான்.
இழுக்கி
- கடிந்து. இதேல் : விகாரம். அழுக்கம் - அழுங்குதல்.
பண்டர் - பாண்மக்கள். (48)
மடக்கு பல்கலைப் பேழையு மணிக்கலம் பிறவும்
அடக்கு பேழையுங் கருவியாழ்க் கோலுமாங் காங்கே
கிடக்க மானமு மச்சமுங் கிளர்ந்துமுன் னீர்த்து
நடக்க வுத்தர திசைக்கணே நாடினா னடந்தான். |
(இ
- ள்.) பல்கலை மடக்கு பேழையும் - பல் வகை ஆடைகளை
மடித்து வைத்துள்ள பெட்டிகளும், மணிக்கலம் பிறவும் அடக்கு பேழையும் -
மணிகள் இழைத்த அணிகளையும் பிற பொருளையும் அடக்கிய பெட்டிகளும்,
கருவியாழ்க் கோலும் - கருவியாகிய யாழ்க்கோலும், ஆங்காங்கே கிடக்க
-அங்கங்கே கிடக்க, மானமும் அச்சமும் கிளர்ந்து முன் ஈர்த்து நடக்க -
மானமும் பயமும் முன்னே இழுத்துச் செல்ல, உத்தர திசைக்கணே நாடினான்
நடந்தான் - வட திசைக் கண்ணே நாடிச் சென்றான்.
மானம்
அழிந்து விடுமென்னும் அச்சத்தால் விரைந்து சென்றானென்பார்,
மானமும் அச்சமும் ஈர்த்து 'நடக்க' என்றார். மிக விரைந்து செல்லுங்
கருத்தால் பேழை முதலியவற்றை எடாது சென்றனன் என்க. நாடினான் :
முற்றெச்சம். (49)
சிவிகை யோர்வழி விறலிய ரோர்வழி செல்லக்
கவிகை யோர்வழி கற்பவ ரோர்வழி கடுகக்
குவிகை யேவல ரொருவழி கூடநா ணுள்ளத்
தவிகை யோவரு மொருவழி யகன்றிட வகன்றான். |
(இ
- ள்.) சிவிகை ஓர் வழி விறலியர் ஓர் வழி செல்ல - பல்லக்கு
ஒரு வழியிலும் பாடினிகள் ஒரு வழியினுஞ் செல்லவும், கவிகை ஓர் வழி கற்பவர்
ஓர் வழி கடுக - குடை ஒரு வழியிலும் மாணவகர் ஒரு வழியிலும் விரைந்து
செல்லவும், கை குவி ஏவலர் ஒரு வழி கூட - கை கூப்பி வணங்கும்
ஏவலாளர் ஒரு வழியிற் செல்லவும், உள்ளத்து நாண் அவிகை ஓவரும் ஒரு
வழி அகன்றிட - உள்ளத்தின் கண் நாண் ஒழிந்த பாண் மக்களும் ஒரு வழி
அகல, அகன்றான் - தானும் நீங்கினான்.
விறலியர்
- பாடினிகள்; பாடுமகளிர்; விறல்பட ஆடு மகளிர் என்பர்
நச்சினார்க்கினியர். அவிகை - அவிதலுடைய. ஓவர் - ஏத்தாளர்; அரசர்களை
ஏத்துவோர்; பாணர். (50)
|