II


396திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



நிலத்தின்கண் தோய்ந்தன; ஐயநின் பெருமை - (ஆதலால்) ஐயனே நினது
பெருமை, அடியனேற்கு எளிது ஆயதோ - அடியேனுக்கு எளிதாயிற்றோ?

     செடியனேன் - பாவியேன்; செடி - குற்றம். தோய்ந்த : அன்பெறாத
பலவின்பால் முற்று. எத்தனையும் அரிய நின் பெருமை ஒன்றுக்கும் பற்றாத
புன்மையேன் திறத்தும் எளிதாயிற்றோ என்றபடி. (55)

பநாத வந்தமுங் கடந்தமெய்ஞ் ஞானவா னந்த
போத மென்பரஃ தின்றொரு புடவிமா னுடமாய்
ஆத பந்தெற வெறிந்த* விந்தனஞ்சுமந் தடியேன்
பேதை யன்பள வாயதோ பெருமநின் னுருவம்.

     (இ - ள்.) பெரும - பெருமானே, நின் உருவம் - தேவரீரின் உருவம்,
(நாத அந்தமும் கடந்த - நாதாந்தத்தினையுங் கடந்தருளிய, மெய் ஞான
ஆனந்த போதம் என்பர் - உண்மையறிவானந்த மென்று கூறுவர் பெரியோர்;
அஃது இன்று ஒரு புடவி மானுடமாய் - அவ்வுருவம் இன்று
இந்நிலவுலகின்கண் ஒரு மனித வடிவாய், ஆதபம் தெற - வெய்யில் சுட்டு
வருத்த, எறிந்த இந்தனம் சுமந்து - வெட்டிய விறகினைச் சுமந்து, பேதை
அடியேன் அன்பு அளவு ஆயதோ - பேதையாகிய அடியேனது அன்பின்
அளவாகியதோ.

     நாத அந்தம் - குடிலை. போதம் - தெளிவு என்னும் பொருட்டு.
ஆதபம் - வெய்யில். பேதையாகிய அடியேன் என மாறுக; பொய்யன்பு
எனலுமாம். (56)

மறிந்த தெண்டிரை கிடந்தவ னுந்தியில் வந்தோன்
அறிந்த தன்றரும் பொருள்வரம் பகன்றெழு விசும்புஞ்
செறிந்த வண்டமுங் கடந்தது சிறியனேன் பொருட்டாத்
தறிந்த+விந்தனஞ் சுமந்ததோ தம்பிரான்+முடியே.

     (இ - ள்.) தம்பிரான்முடி - இறைவனது திருமுடியானது, மறிந்த
தெண்திரை கிடந்தவன் - மடங்கி வீசுந் தெளிந்த அலைகளையுடைய
பாற்கடலிற் பள்ளி கொண்டவனாகிய திருமாலும், உந்தியில் வந்தோன் -
அவனது உந்தியிற்றோன்றியவனாகிய பிரமனும், அறிந்தது அன்று -
அறிந்ததன்று; அரும் பொருள் வரம்பு - அரிய பொருள்களின் முடிவாயது;
அகன்று எழு விசும்பும் செறிந்த அண்டமும் கடந்தது - பரந்த வானினையும்
நெருங்கிய அண்டங்களையுங் கடந்தது; சிறியனேன் பொருட்டா - (அஃது)
இன்று சிறியனாகிய என் பொருட்டு, தறிந்த இந்தனம் சுமந்ததோ -
வெட்டப்பட்ட விறகினைச் சுமந்ததோ.

     அரும்பொருள் - மறைப்பொருள்; தத்துவங்கள்;

"போதார் புனைமுடியும் எல்லாப் பொருண் முடிவே"

     (பா - ம்.) * தெறத்தறிந்த. +எறிந்த. +எம்பிரான்.