II


4திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



முகிலின் மேலும், முன்னை நாம் முகிலும் போக்கி - முன் விடுத்த நான்கு
முகிலையும் போக விடுத்து, மதுரை - மதுரைப்பதியை நான்மாடக்கூடல்
ஆக்கியவண்ணம் சொல்வாம் - நான்மாடக் கூடலாகச் செய்தருளிய
திருவிளையாடலைக் கூறுவாம்.

     ஏவிய என்பன ஏயவென விகாரமாயின. ஈது, சுட்டு நீண்டது சூல்
முதிர்ந்த வென்க. முன்னைய எனற்பாலது முன்னை என நின்றது. இன்னுருபு
விரித்து முன்போல என்னலுமாம். (3)

எற்றுதெண் டிரைநீர்ச் சேர்ப்பன் றன்செய லிழுக்கி நாணம்
உற்றிரு கண்ணுஞ் சேப்ப வுடன்றெழு கோபச் செந்தீப்
பற்றிட வாகம் வெம்பிப் பரவையும் யாறும் வெந்து
வற்றிட வெகுண்ட நின்றான் மானமும் வலியுங் குன்றான்.

     (இ - ள்.) எற்று தெள் திரை நீர்ச் சேர்ப்பன் - (கரையை) மோதும்
தெள்ளிய அலைகளையுடைய கடற் றலைவனாகிய வருணன், தன் செயல்
இழுக்கி நாணம் உற்று - தனது செய்ல தவறினமையால் நாணுதலுற்று,
மானமும் வலியும் குன்றான் - தன் மானமும் வன்மையும் குறையாதவனாய்,
இரு கண்ணும் சேப்ப உடன்று எழுகோபச் செந்தீ பற்றிட - இரண்டு
விழிகளும் சிவக்க மாறுபட்டெழுந்த சினமென்னும் செந்நெருப்பு மூளுதலால்,
ஆகம் வெம்பி - உடல்கருகி, பரவையும் ஆறும் வெந்து வற்றிட - கடலும்
நதியும் வெந்து வற்றுமாறு, வெகுண்டு நின்றான் - சீறி நின்றான்.

     திரைநீர் - கடல். சேர்ப்பன் - துறைவன்; ஈண்டுத் தலைவன் என்னும்
பொருட்டு. இழுக்குதலால் என்பது இழுக்கியென நின்றது. சேப்ப, சிவப்ப
என்பதன் மரூஉ, கடலும் யாறும் முதலாயின அவனுக்கு உடம்பாகலின்
‘ஆகம் வெம்பிப் பரவையும் யாறும் வெந்து வற்றிட’ என்றார். இறைவன்
கடலை வள்ளச் செய்தமை உணர்ந்த பின்னரும் பணிந்துய்தலின்றி,
மாண்பிறந்த மானமும் மதமும் உடையனாயினான் என்பார் ‘மானமும்
வலியுங் குன்றான்’ என்றார். குன்றான் : முற்றெச்சம். (4)

நளிர்புனன் மதுரை மூதூர் நாயக னாட றன்னைத்
தெளிகில னாகிப் பின்னுஞ் செழுமுகி லேழுங் கூவிக்
குளிர்கடல் வறந்த தென்னக் குடித்தெழுந் திடித்துப் பெய்யா
ஒளிவளர் மதுரை முற்று மொல்லெனக் களைமி னென்றான்.

     (இ - ள்.) (அங்ஙனம் நின்ற வருணன்) நளிர் புனல் மதுரை மூதூர்
நாயகன் ஆடல் தன்னைத் தெளிகிலனாகி - குளிர்ந்த புனல் சூழ்ந்த
மதுரையாகிய தொல்பதியில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளின்
திருவிளையாடலைத் தெளியாதவனாகி, பின்னும் - மீளவும், செழுமுகில்
ஏழும் கூவி - செழிய ஏழு முகில்களையும் அழைத்து, குளிர் கடல் வறந்தது
என்னக் குடித்து எழுந்து இடித்துப் பெய்யா - (நீவிர்) குளிர்ந்த கடல்
வற்றியதுஎன்று சொல்லுமாறு நீரினைக் குடித்து மேலெழுந்து இடித்து