II


404திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



அரண்மனையில் இசை பாடுகின்ற உரிமையைவிட்டு, குனி மதி மிலைந்த
நாதன் - வளைந்த மதியினை அணிந்த இறைவனது, கோயில் முப்போதும்
எய்தி - திருக்கோயிலை மூன்று காலங்களினும் அடைந்து, மதிகனி அன்பில்
பாடும் - உள்ளத்திற் கனிந்த அன்பினாலே பாடுகின்ற, கடப்படு நியமம்
பூண்டான் - கடமையாகிய நியதியை மேற்கொண்டான்.

     அரசன் கூறிய இந்நெறியில் ஒழுகுதலே எமக்கு அறிவென்று
கொண்டென்க. முப்போது - காலை நண்பகல் மாலை. (2)

இத்தொழி லன்றி வேறு தொழிலிவற் கின்மை யாலே
பத்திர னிலம்பா டெய்தப் பொறுப்பரோ பழனக் கூடற்
சித்தவெம் மடிகள் வேந்தன் பொன்னறைச் செல்வம் வௌவிப்
பத்தர்யா ழிடத்தோ ளேந்திப் பாடுவான் காண வைப்பார்.

     (இ - ள்.) இத்தொழில் அன்றி - இங்ஙனம் இறைவன் திருமுன்
பாடுதலேயன்றி, வேறு தொழில் இவற்கு இன்மையாலே - வேறு தொழில்
இவனுக்கு இல்லாமையினால், பத்திரன் இலம்பாடு எய்த - பாணபத்திரன்
வறுமையை அடைய, பழனக்கூடல் சித்த எம் அடிகள் பொறுப்பரோ - வயல்
சூழ்ந்த கூடலிலுள்ள சித்தராகிய எம்மிறைவர் அதனைப் பொறுப்பரோ
(பொறாராகலின்), வேந்தன் பொன் அறைச் செல்வம் வௌவி - மன்னனது
கருவூலத்திலுள்ள செல்வங்களைக் கவர்ந்து, பத்தர் யாழ் இடத்தோள் ஏந்தி -
பத்தரையுடைய யாழினை இடது தோளிலேந்தி, பாடுவான் காணவைப்பார் -
பாடுகின்ற பாண பத்திரன் காணுமாறு எதிரில் வைப்பாராயினர்.

     வேறு தொழில் - அரசவையிற் பாடுதல் மாணவர்க்குக் கற்பித்தல்
முதலிய பொருள் பெறுந் தொழில். (3)

சிலைபொலங் காசு சின்னாண் மணிக்கலன் சின்னாள் செம்பொற்
கலைவகை சின்னா ளம்பொற் சாமரைக் காம்பு சின்னாள்
அலர்கதி ரரிமான் சேக்கை யாடகத் தகடு சின்னாள்
குலமணி வருக்கஞ் சின்னாள் கொடுத்திடக் கொண்டு போவான்.

     (இ - ள்.) சில நாள் பொலங்காசு சில - சில நாள் பொற்காசு
சிலவும், சில் நாள் மணிக்கலன் - சில நாள் மணிகள் இழைத்த அணிகளும்,
சில் நாள் செம்பொன் கலைவகை - சில நாள் சிவந்த பொன்னாடை
வகைகளும், சில் நாள் அம்பொன் சாமரைக் காம்பு - சில நாள் அழகிய
பொன்னாலாகிய சாமரைக் காம்புகளும், சில் நாள் - சில நாள், அரிமான்
சேக்கை - சிம்மாசனத்தில் வேய்ந்த, அலர் கதிர் ஆடகத்தகடு - விரிந்த
ஒளியினையுடைய பொற்றகடும், சில் நாள் குர மணி வருக்கம் - சில நாள்
பலசாதி மணிக் குவியல்களும், கொடுத்திட அளிக்க, கொண்டு போவான் -
பெற்றுக்கொண்டு போவானாயினன்.

     குலம் - சிறப்புமாம். (4)