கைவரும் பொருளைத் தந்த கள்வருந் தானு மன்றி
எவ்வெவர் தமக்குந் தோற்றா தெரியிலிட் டழித்துஞ் சின்னஞ்
செய்வன செய்துந் தன்னைச் சேர்ந்தவ ரிரந்தோர் கைபார்த்
துய்பவர் பிறர்க்கு மாறா துதவியுட் கவலை தீர்ப்பான். |
(இ
- ள்.) கைவரும் பொருளை - அங்ஙனம் கையில்வந்த பொருளை
தந்த கள்வரும் தானும் அன்றி - தனக்கு அளித்த கள்வரும் தானுமே
அல்லாமல், எவ்வெவர் தமக்கும் தோற்றாது - எவ்வகையினர்க்கும்
புலப்படாமல், எரியில் இட்டு அழித்தும் - நெருப்பில் இட்டு வருவழித்தும்
சின்னம் செய்வன செய்தும் - உருமாற்ற வேண்டியகைகளை அங்ஙனமே
செய்தும், தன்னைச் சேர்ந்தவர் இரந்தோர் - தன்னைச் சார்ந்தவர்க்கும்
இல்லையென்றிரந்தவர்க்கும், கை பார்த்து உய்பவர் பிறர்க்கும் - தன் கை
வரவு பார்த்துப் பிழைப்போர்க்கும், இவரொழிந்த பிறர்க்கும், மாறாது உதவி
உள்கவலை தீர்ப்பான் - இடையறாது கொடுத்து அவர்களின் உள்ளக்
கவலையைப் போக்கி வருவான்.
அழித்தல்
- உருக்குதல். சின்னஞ் செய்தல் - முன்னையுருத்தோன்றா
வகை பேதித்தல். தன்னைச் சேர்ந்தவர் - சுற்றத்தார். கைபார்த்துய்பவர் -
பரவுவோர், ஏவல் செய்வோர் முதலாயினார். (5)
வைகலுங் கொடுப்போர்
பின்னாண் மறுத்தன ராகப் போய்ப்போய்க்
கைதொழு திறைஞ்சி வாளா வருமவன் கலியின் மூழ்கி
உய்வகை வேறு காணா தொக்கலு மொக்க வாடிக்
கையற வடைய நோனா துறங்கினான் கனவி னெல்லை. |
(இ
- ள்.) வைகலும் கொடுப்போர் - இங்ஙனம் நாள்தோறும்
கொடுத்துவரும் இறைவர், பின்நாள் மறுத்தனராக - பிந்திய நாட்களில்
கொடாது மறுத்தாராக; போய்ப்போய் - சென்றுசென்று, கை தொழுது
இறைஞ்சி - கைகூப்பி வணங்கி, வாளா வரும் அவன் - ஒன்றும் பெறாது
வருகின்ற அப்பாணபத்திரன், கலியில் மூழ்கி - வறுமைக் கடலிலழுந்தி,
உய்வகை வேறுகாணாது - பிழைக்கும் வகை வேறு காணாமல், ஒக்கலும்,
சுற்றத்தாரும், ஒக்க வாடிக் கையறவு அடைய - ஒரு சேர வாடித் துன்பமுற,
நோனாது உறங்கினான் - பொறுக்க லாற்றாது துயின்றான்; கனவின் எல்லை
- அப்பொழுது அவன் கனவின் கண்.
ஒக்க
- உடன் என்றுமாம். கையறவு - கையாறு; செயலறுதி யாகிய
துன்பம். நோன்றல் - பொறுத்தல். (6)
சித்தவெம் பெருமான் வந்து செப்புவா ரப்பா நிம்பத்
தொத்தவன் கோசந் தன்னிற் றும்பியுண் கனியின் வௌவி
இத்தன மின்று காறு மீந்தன மெம்பா லன்பு
வைத்தவ னறிந்தாற் சங்கை மனத்தனாய் விகற்பங் கொள்வான். |
|