II


406திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) சித்த எம்பெருமான் வந்து செப்புவார் - சித்த மூர்த்தி
களாகிய எம் பெருமானார் தோன்றியருளிக் கூறுவார்; அப்பா - அப்பனே,
நிம்பத் தொத்தவன் - வேப்பமலர் மாலையை யணிந்த பாண்டியனது, கோசம்
தன்னில் - பொன்னறையில், தும்பி உண் கனியின் வௌவி - வேழம் உண்ட
விளாங்கனிபோல (அது ஆகுமாறு) கவர்ந்து, இத்தனம் இன்றுகாறும் ஈந்தனம்
- இந்தப் பொருளை இந்நாள் வரையும் கொடுத்தருளினோம்; எம்பால் அன்பு
வைத்தவன் அறிந்தால் - எம்மிடத்து அன்புவைத்த வரகுணபாண்டியன்
அறிந்தானாயின், சங்கை மனத்தனாய் விகற்பம் கொள்வான் - ஐயமுற்ற
மனத்தினனாய் வேறுபட்டு.

     அப்பா என அன்பால் விளித்தார். தொத்து - பூங்கொத்து. கோசம் -
பொன்னறை. கனியின் - கனிபோல வறிதாக. சங்கை - ஐயம். விகற்பங்
கொள்ளல் - தடுமாற்ற மடைதல். கொள்வான் என்பதனை எச்சமாக்குக. (7)

மயலறக் கற்புக் காக்கு மகளிர்போற் றுறவு காக்க
முயலும்யோ கரிலுட் காப்பு முரசெறி புறஞ்சூழ் காப்புங்
கயலிலச் சினையு நிற்கக் கவர்ந்ததற் புதமிக் கள்வன்
உயிர்தொறு மொளித்து நின்ற வொருவனோ* வறியே னென்பான்.

     (இ - ள்.) மயல் அறக் கற்புக் காக்கும் மகளிர்போல் - (வேறு
ஆடவரிடத்து) ஆசை இல்லையாகக் கற்பினைக் காக்கின்ற மகளிர்
போலவும், துறவு காக்க முயலும் யோகரில் - துறவினைக் காக்க
முயலுகின்ற சிவயோகிகளைப் போலவும், உள்காப்பும் - அகக்காவலும்,
முரசு எறிபுறம் சூழ்காப்பும் - எறிகின்ற முரசொலியுடன் சூழ்தரும்
வெளிக்கவலும், கயல் இலச்சினையும் நிற்க - மீன முத்திரையும் உள்ளவாறே
இருக்க, கவர்ந்தது அற்புதம் - பொருளை வௌவியது வியக்கத்தக்கது;
இக்கள்வன் - இங்ஙனம் கவர்ந்த கள்வன், உயிர் தொறும் ஒளித்துநின்ற
ஒருவனோ - உயிர்கள் தோறும் ஒளித்துநின்ற ஒருவனாயிருப்பானோ,
அறியேன் என்பான் - அறியேனே என்று கருதுவான்.

     மயல் - மையல்; ஆசை. கற்புக் காக்கும் மகளிர்க்கு நாண் முதலியன
அகத்தே நீங்காது நின்று காத்தல்போலவும் துறவுகாக்க முயல்வார்க்குப்
புறத்திலுள்ள ஐம்பொறிகளும் விடயங்கள் புகுதாது தடுத்து நிற்றல்போரவும்
உட்காப்பும் புறஞ்சூழ் காப்பும் என முறை நிரனிறையாகக் கொள்க.
உயிர்தொறு மொளித்து நின்ற வொருவனோ எனத் தன்னை ஐயுறுதலுஞ்
செய்வான் என்றபடி. (8)

கோமக னினைய செய்தி யறியுமெற் கோசங் காப்போர்க்
காமுறு+தண்ட நின்போ லன்பகத் தெம்மை வைத்த
தெமரு போந்தின் கண்ணிச் சேரமான் றனக்கிப் போது
நாமொரு முடங்க றீட்டி நல்குவம் போதி யென்னா.

     (பா - ம்.) * ஒளித்த கள்வ னொருவனோ. +ஆமுறுந் தண்டம்.