II


திருமுகங்கொடுத்த படலம்411



மற்றவர் தமைத்துரீஇ வருக தில்லெனக்
கொற்றவ னேவலோர் குறுகி மாடமுந்
தெற்றியு நியமமு மன்றுஞ் சென்றுசென்
றெற்றிகழ் மணிநக ரெங்குந் தேடுவார்.

     (இ - ள்.) அவர் தமைத் துரீஇ வருகதில்லென - அப்பாண
பத்திரரைத் தேடிக் கண்டு வருக என்று கட்டளையிட, கொற்றவன் ஏவலோர்
- அரசன் ஏவலாளர், குறுகி - சென்று, மாடமும் தெற்றியும் - மாடங்களிலும்
திண்ணைகளிலும், நியமமும் மன்றும் - கடைவீதிகளிலும் மன்றங்களிலும், எல்
திகழ் மணி நகர் எங்கும் - சூரியனைப்போல விளங்கும் அழகிய நகரின்
எவ்விடத்தும், சென்று சென்று தேடுவார் - போய்ப்போய்த தேடுவாராயினர்.

     மற்று : அசை, துரீஇ - துருவி; சொல்லிசை யளபெடை. தில் :
விழைவுப்பொருளில் வந்த இடைச்சொல்; கால விரைவுப் பொருளில்
வந்ததென்பாரு முளர். தெற்றி - அம்பலமுமாம். நியமம் - கடைவீதி,
சென்று சென்று : தொழிற் பயில்வுப் பொருளில் வந்த அடுக்கு. (19)

தருமநீர்ப் பந்தரி னிருக்குந் தந்திரி
வருமிசைக் கிழவனைக் கண்டு வல்லைபோய்த்
திருமகற் குணர்த்தினார் சேனையோ டெழீஇப்
பெருமகன் பாணர்தம் பிரானை நண்ணினான்.

     (இ - ள்.) தரும நீர்ப் பந்தரின் இருக்கும் - அறத்தின் பொருட்டு
வைத்த நீர்ச்சாலையில் இருக்கும், தந்திரி வரும் இசைக்கிழவனைக் கண்டு
- யாழ் கைவந்த பாண பத்திரனைக் கண்டு, வல்லை போய் - விரைந்து
சென்று, திருமகற்கு உணர்த்தினார் - வேந்தனுக்குத் தெரிவித்தனர்;
பெருமகன் - அவ்வரசர் பெருமானும், சேனையோடு எழீஇ - நால்வகைப்
படையோடும் எழுந்து, பாணர்தம் பிரானை நண்ணினான் - பாணர்
பெருமானை அடைந்தனன்.

     தந்திரி : ஆகுபெயர். வரும் - கைவரும், எழீஇ, சொல்லினை
யளபெடை, (20)

கண்டனன் முகிழ்த்தகைக் கமலஞ் சென்னிமேற்
கொண்டனன் பாடினன் கூத்து மாடினன்
தண்டென வீழ்ந்தன னன்பிற் றண்ணறா
வண்டென மகிழ்ந்தனன் மன்னர் மன்னனே.

     (இ - ள்.) மன்னர் மன்னன் - அரசர்க்கரசனாகிய சேரமான்,
கண்டனன் - பத்திரனைக் கண்டு, அன்பில் - அன்பினால், முகிழ்த்த
கைக்கமலம் - கூப்பிய கைத்தாமரைகளை, சென்னிமேல் கொண்டனன் -
தலையின்மேற் கொண்டு, பாடினன் கூத்தும் ஆடினன் தண்டு என
வீழ்ந்தனன் - பாடி ஆனந்தக்கூத்தாடித் தண்டம் போற் கீழே வீழ்ந்து,
தண் நறா வண்டு என