(இ
- ள்.) மின் அவிரும் செம்பொன் மணிமாடக் கூடல் - ஒளி
விளங்கும் சிவந்த பொன்னாலாகிய அழகிய மாடங்கள் நெருங்கிய
கூடற்பதியின்கண், மேய சிவன் யாம் - எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானாகிய யாம், எழுதிவிடுக்கும் மாற்றம் - எழுதி அனுப்புஞ்
செய்தி, நன்னர் முகில் என - நல்ல மேகம்போல, புலவர்க்கு உதவும் சேர
நரபாலன் காண்க - புலவர்களுக்கு வரையா தளிக்கும் சேரவேந்தன் காண்க;
இன் இசை யாழ்ப்பத்திரன் - இத்திருமுகங் கொண்டு வரும் இனிய
இசையினையுடைய யாழில் வல்ல பாணபத்திரன், தன்போல நம்பால் அன்பன்
- தன்னைப்போல நம்மிடத்து அன்புடையான், தன் மாடே போந்தான் -
அவன் தன்னிடத்து வருகின்றான், இரு நிதியம் கொடுத்து வரவிடுப்பது
என்ன - (அவனுக்கு) மிக்கபொருள் கொடுத்து அனுப்புவது என்று, தென்னர்
பிரான் - பாண்டியர் பெருமானாகிய சோமசுந்தரக் கடவுள் (வரைந்தருளிய)
திருமுகத்தின் செய்தி நோக்கி - திருமுகத்தின் செய்தியை நோக்கி,
சேரர்பிரான் களிப்பு எல்லை. தெரியானாகி - சேரர்பெருமான் மகிழ்ச்சியின்
வரம்பினை அறியாதவனாகி.
நரபாலன்
எனவும், தன் எனவும் படர்க்கையாற் கூறினார். திரு
முகத்தில் இங்ஙனங் கூறுவது மரபு. தன்போல் - நின்னைப்போல். தம்மாடு
- நின் பக்கல், விடுப்பது, வியங்கோள், எல்லை தெரியாத களிப்புடையனாகி
யென்க. (23)
[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
|
பொன்னின்
றளிகை மிசைவைத்துப் புழைக்கை மதமான் றலையேற்றி
மன்னுங்கொளையாழ்ப் புலவனைமுன் வைத்துப் பின்னே தானிருந்து
மின்னுங் கதிர்கா லிணைக்கவரி வீசிப் பலவே றியங்கலிப்பத்
தென்னென் றளியா ரிசைத்தாரான் றிருமா நகரை வலஞ்செய்யா. |
(இ
- ள்.) பொன்னின் தளிகை மிசை வைத்து - (அத்திருமுகத்தைப்)
பொற்பீடத்தின் மேல் வைத்து, புழைக்கை மதமான் தலை ஏற்றி - துளை
பொருந்திய கையையும் மதத்தையுமுடைய யானையின் தலையில் ஏற்றி,
மன்னும் கொளையாழ்ப் புலவனை முன்வைத்து - பெருமை பொருந்திய
இசையமைந்த யாழ்ப் புலவனாகிய பாண பத்திரனை முன்னர் வைத்து, தான்
பின்னே இருந்து - தான் பின்னே அமர்ந்து, மின்னும் கதிர்கால் இணைக்
கவரி வீசி - விளங்கும் ஒளியினை வீசும் இரட்டைக் கவரிகளை வீசி,
பல்வேறு இயம் கலிப்ப - பலவகை வாச்சியங்களும் ஒலிக்க, தென்னென்று
அளி ஆர் - இசைத்தாரான் - தென்னென்று வண்டுகள் மொய்த்து இசை
பாடும் மாலையை யணிந்த சேரமான் பெருமான், திருமா நகரை வலம்
செய்யா - அழகிய பெரிய நகரை வலஞ் செய்வித்து.
கொளை
- இசைப்பாட்டு. இரண்டு கையாலும் இரு பக்கத்தும் கவரி
வீசினான் என்க. தென்னென்று. இசைக் குறிப்பு. (24)
|