பஞ்சு தடவுஞ் சீறடியார் பலமங் கலங்கொண் டெதிர்போத
மஞ்சு தடவு நீள்குடுமி மாட மனையிற் கொடுபோகி
நஞ்சு தடவு மணிகண்ட னன்பன் றனை*நன் னீராட்டி
அஞ்சு தடவி யோவியஞ்செய் தமைத்த மணிமண் டபத்தேற்றி. |
(இ
- ள்.) மஞ்சு தடவும் சீறடியார் - செம்பஞ் சூட்டிய சிறிய
அடியினையுடைய மகளிர், பல மங்கலம் கொண்டு எதிர்போத - அட்ட
மங்கலங்களையும் ஏந்தி எதிர் வர, மஞ்சு தடவு நீள் குடுமி மாடம்
மனையில் - முகிலை அளாவும் உயர்ந்த சிகரம் பொருந்திய மாடத்தை
யுடைய அரண்மனையின்கண், கொடு போகி - கொண்டுசென்று, நஞ்சு
தடவும் மணி கண்டன் அன்பன் தனை - நஞ்சு அளாவிய
நீலகண்டத்தையுடைய சிவபெருமானுக்கு அன்பனாகிய பத்திரனை. நல் நீர்
ஆட்டி - மணம் பொருந்திய நீரால் மஞ்சனஞ் செய்வித்து, அஞ்சு தடவி
ஓவியம் செய்து அமைத்த - ஐவகை நிறங்களும் தடவி ஓவியம் வரைந்
தமைத்த, மணி மண்டபத்து ஏற்றி - மணிகள் அழுத்திய மண்டபத்தில்
எழுந்தருள்வித்து.
மணிகண்டன்
- நீல மணிபோலும கரிய திருமிடற்றையுடையன்.
அஞ்சு, ஐந்து என்பதன் போலி; நிலத்திற்கு ஆகு பெயர். (25)
அம்பொற்
றவிசிட் டருச்சனைசெய் தாறு சுவையின் னமுதருததிச்
செம்பொற் கலவை நறுஞ்சாந்தந் தீம்பூ வாதி முகவாசம்
பைம்பொற் கலத்து வெள்ளிலைதீம் பழுக்காய் பிறவு முறைநல்கி
உம்பர்க் கிறைவன் றிருமுகத்தி லுய்ப்ப தெனலா லுய்த்துமென. |
(இ
- ள்.) அம்பொன் தவிசு இட்டு - அழகிய பொன்னாலாகிய தவி
சளித்து, அருச்சனை செய்து - அருச்சித்து, அறுசுவை இன் அமுது அருத்தி
- அறுவகைச் சுவையுமுடைய இனிய அமுதினை உண்பித்துச், செம்பொன்
கலவை நறுஞ் சாந்தம் - சிவந்த பொன்னிறம்வாய்ந்த நறிய கலவைச்
சந்தனமும், தீம்பூ ஆதி முகவாசம் - தீம்பூ முதலிய முகவாசமும்,
பைம்பொன் கலத்து - பசிய பொற்றட்டின்கண், வெள்ளிலை தீம்பழுக்காய்
பிறவும் - வெற்றிலையும் இனிய பாக்கும் பிறவுமாகிய வற்றை, முறை நல்கி
- முறைப்படி கொடுத்து, உம்பர்க்கு இறைவன் திருமுகத்தில் - அதவர்கடகுத்
தலைவனாகிய சோமசுந்தரக்கடவுள் அருளிய திருமுகத்தின் கண், உய்ப்பது
எனலால் - வரவிடுப்பது என்று கட்டளை யிருத்தலால், உய்த்தும் என -
அங்ஙனமே செய்வோமென்று கருதி.
தவிசிட்டு
- தவிசில் இருக்கச்செய்து என்க. செம்பொற் கலவை
பொற்சுண்ணம் முதலியன கலந்தவையுமாம். முகவாசம் இவை யென்பதனை,
(பா - ம்.)
* நண்பன்றனை.
|