II


42திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



புத்தரம ணாதிய* புறக்களை யகழ்ந்து
நித்தமறை யாகம நெறிப்பயிர் வளர்த்து
மெய்த்தவிதி பத்தியின் விளைந்தபயன் யாருந்
துய்த்திட மனுத்தொழி னடத்திவரு தூயோன்.

     (இ - ள்.) புத்தர் அமண் ஆகிய புறக்களை அகழ்ந்து - புத்தரும்
சமணரும் முதலிய புறமதக் களைகளைக் களைந்து, நித்தம் மறை ஆகம
நெறிப்பயிர் வளர்த்து - அழியாத வேதநெறியும் ஆகம நெறியுமாகிய
பயிரினை வளர்த்து, மெய்த்த விதி பத்தியின் விளைந்த பயன் -
(அப் பயிரின்) மெய்ம்மையையுடைய விதியாகவும் பத்தியாகவும் வளைந்த
பயனை, யாரும் துய்த்திட - அனைவரும் நுகர, மனுதொழில் நடத்தி வரு
தூயோன் - மனுமுறைப்படி ஆட்சி புரிந்து வருகின்ற தூயவனாகிய
பாண்டியன்.

     புத்தம் சமணம் முதலிய புறச் சமயங்களாகிய களையென்க.
மறையாகம நெற்பயிர் - வைதிக சைவமாகிய பயிர். விதி பத்தியின் -
விதிநெறியும் பத்தி நெறியுமாக; இன் : சாரியை. மனுத்தொழில் - நீதி
ஆட்சி. இஃது உருவகவணி. (3)

மருவிதழி யானுறையும் வானிழி விமானத்
தருகுவட பக்கமுற வாலய மெழுப்பி
உருவரு விரண்டினையு மொருவிவரு சித்தர்
திருவுருவு கண்டுபணி செய்தொழுகு+நாளில்.

      (இ - ள்.) மரு இதழியான் உறையும் வான் இழி விமானத்து அருகு
வடபக்கம் உற - மணம் பொருந்திய கொன்றை மலர்மாலையை யணிந்த
சோமசுந்தரக் கடவுள் வீற்றிருக்கும் விண்ணுலகி னின்றும் இறங்கிய
விமானத்தின் அருகில் வடபக்கத்தில், ஆலயம் எழுப்பி - திருக்கோயில்
எடுப்பித்து, உரு அரு இரண்டினையும் ஒருவி வரு சித்தர் திரு உருவு கண்டு
- உருவத்தினையும் அருவத்தினையும் நீங்கி அருளுருக் கொண்டுவந்த
சித்தசாமிகளின் திருவுருவத்தை ஆக்கி, பணிசெய்து ஒழுகு நாளில் - தொண்டு
செய்தொழுகும் காலத்தில்.

     பக்கமுற - பக்கமாக. உருவும் அருவும் மாயையின் காரியமாகலின்
அவற்றை ஒருவிவரு என்றார். கண்டு - பிரதிட்டித்து. (4)

செய்யகதி ரோன்வழிய செம்பிய னொருத்தன்
கையனவன் வென்றிபயில் காஞ்சிநக ருள்ளான்
பொய்யமணர் கட்டுரை புறத்துறையி னின்றான்
மையின்மதி மாறனொடு மாறுபட நின்றான்.

     (இ - ள்.) செய்ய கதிரோன் வழிய செம்பியன் ஒருத்தன் - சிவந்த
கிரணங்களை யுடையவனாகிய சூரியன் வழியில் சோழன் ஒருவன், வென்றி
பயில் காஞ்சி நகருள்ளான் - வெற்றி பொருந்திய காஞ்சி நகரத்தில்
இருப்பானாயினன்; பொய் அமணர் கட்டுரை புறத்துரையில் நின்றான் -


     (பா - ம்.) * ஆதியர். +செய்துவரு.