(தலைவனையும்) அறியாதவர்கள்
உள்ளம் போல, உள்புறம்பு மருங்கொடு
கீழ் மேல் என்று தெரியாத - உள்ளென்றும் வெளியென்றும் பக்கமென்றும்
கீழென்றும் மேலென்றும் அறியலாகாத, மயங்கு இருள்வாய் - மயங்கிய
இருளின்கண்.
தாரைகள்
வெண்ணிற முடையன வாயினும் இருளின் செறிவாற் கருகின
என்றார்.
"விசும்புற வெள்ளிவெண்
கோல் நிரைத்தன போற்கொழுந் தாரைகள்" |
என்று திருத்தக்க
தேவரும்,
"வான், வெள்ளிவீழிடை
வீழ்த்தெனத் தாரைகள்" |
என்று கம்பரும்
கூறுவன காண்க. உள் - உள்ளம் : ஆன்மா. (6)
மாமாரி யிடைநனைந்து வருவானம் மாரிதனைப்
பூமாரி யெனநினைந்து திருக்கோயில் புகுந்தெய்திக்
காமாரி தனைப்பணிந்து கருணைமா ரியினனைந்து
தேமாரி பொழிவதெனத் தெள்விளியாழ் வாசிப்பான். |
(இ
- ள்.) மாமாரி இடை நனைந்து வருவான் - அந்தப் பெரு
மழையில் நனைந்து வருவானாகிய பாணபத்திரன், அம்மாரிதனைப் பூமாரி
என நினைந்த - அம் மழையை மலர் மழையெனக் கருதி, திருக்கோயில்
புகுந்து எய்தி - திருக்கோயிலுட் சென்று புகுந்து, காமாரிதனைப் பணிந்து -
சோமசுந்தரக் கடவுளை வணங்கி, கருணை மாரியில் நனைந்து -
(அப்பெருமானது) அருள் மழையில் நனைந்து, தேம்மாரி பொழிவது என -
தேன்மழை பொழிவதுபோல. தெள்விளி யாழ் வாசிப்பான் - இசை யமைந்த
யாழினை வாசிப்பானாயினன்.
ஓரிரவில்
மயங்கிருள்வாய் நனைந்து வருவான் என்க. மழையில்
நனைதலால் வருந்துதலன்றி உவகையுடன் சென்றனன் என்பார்
பூமாாயென நினைந்து என்றார். காமாரி - காமனை யெரித்தவன் : தீர்க்க
சந்தி. தெள்விளி - ஒரு பண்; தெளிந்த இசையென்றும் உரைப்பர். (7)
விடைக்கடவுள் பின்னின்று வீணையிடத் தோள்கிடத்திப்
புடைத்துநரம் பெறிந்துமிடற் றொலிபோக்கிப் பொலங்கொன்றைச்
சடைக்கடவுள் செவிவழிபோ யருட்பைங்கூழ் தலையெடுப்பத்
தொடைத்தமிழி னிசைப்பாணிச் சுவையமுத மடைதிறந்து. |
(இ
- ள்.) விடைக்கடவுள் பின் நின்று - இடப தேவரின் பின்னே
நின்று, வீணை இடத்தோள் கிடத்தி - யாழினை இடது தோளில் அணைத்து,
நரம்பு புடைத்து எறிந்து - நரம்பை அமுக்கித் தெறித்து, மிடற்று ஒலி
|