II


424திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



திருவாலவாயினையுடைய சோமசுந்தரக்கடவுள், ஐயம் கொள்வான் - பலி
ஏற்கும் பொருட்டு (எம்மில்லில் வந்து), மையல் நகை செய்து -
காமக்குறிப்புடன் நகைத்து, என் வனம் முலைமேல் - எனது அழகிய
கொங்கையின்மேல், செங்கை வைத்தார் போலும் - தமது சிவந்த
திருக்கரத்தை வைத்தனர் போலும்; மையல் நகைசெய்து என்வனம் முலை
மேல் கை வைப்ப - அவர் அங்ஙனம் செய்ய, மாழ்கிச் சோர்வேன் -
மயங்கிச் சோர்வேனாகிய யான், தையல் இடம் கண்டு ஒருபெண்ணை
அவரது இடப்பாகத்திற்கண்டு, நடு நடுங்கி விழித்து ஆவி தரித்தேன்
போலும் - துணுக்குற்று விழித்து உயிர்தரித்தேன் போலும்.

     வனம் - சந்தனக்கோலமுமாம். மாழ்கிச் சோர்வேன் என்றது நானும்
அவரைக் கூடுதலுற்றேன் என்னும் பொருட்டு. இவை மூன்றிலும் ‘போலும்!’
எனச் சிறிது ஐயறவு தோன்றக் கூறுதலானும், விழித்து என்பதனாலும் இவை
கனவு நிலையுரைத்தல் என்பது பெறப்படும். விறகு விற்ற படலத்தில் இறைவர்
பாடியனவாகவுள்ள பாட்டுக்களிற் போலவே ஈண்டும் மதுரையுங் கூடலும்
ஆலவாயும் முறையே கூறப்பட்டன. இவற்றில் முறையே காதல் முகத்தரும்பி
என்றும், கான மிசைத்து என்றும், செங்கை வைத்து என்றும், கூறியிருப்பன
பக்குவ மெய்திய ஆன்மாவுக்கு ஆசானாக வந்து அருள் செய்யும் இறைவன்
பாவனையானும் வாசகத்தானும் பரிசத்தானும் புரியும் தீக்கைகளைக் குறிப்பின்
உணர்த்துவனவாதல் காண்க. இதற்குப் பலி என்றது உடல் பொருள்
ஆவிகளைக் கொள்ளுதல் ஆகும். (12)

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
பாடுவா ரிருவர்க் கன்று பரிசிலாக் கொடுத்த சங்கத்
தோடுவார் செவியி லூட்டுந் தொண்டுகண் டிதன்மே னின்று
பாடுவா யுனக்கே யிந்தப் பலகையென் றாழ்ந்த வன்பின்
நாடுவார் விசும்பிற் கூறி நவமணிப் பலகை யிட்டார்.

     (இ - ள்.) பாடுவார் இருவர்க்கு - இசை பாடும் இருவர்க்கு, அன்று
பரிசிலாக் கொடுத்த - அந்நாளிற் பரிசிலாகக் கொடுத்தருளிய
சங்கத்தோடுவார் செவியில் - சங்கத்தோட்டினையணிந்த நீண்ட திருச்
செவிகளில், ஊட்டும் தொண்டு கண்டு - இசையை ஊட்டும் திருத்
தொண்டினைக் கண்டருளி, இதன்மேல் நின்று பாடுவாய் - நீ இந்தப்
பலகைமேல் நின்று பாடக் கடவை, இந்தப் பலகை உனக்கே என்று - இது
உனக்கே உரியது என்று, ஆழ்ந்த அன்பின் நாடுவார் - அழுந்திய
அன்பினாலே நாடி அறியப் படுபவராகிய இறைவர், விசும்பில் கூறி -
வானிலே அசரீரியாகக் கூறியருளி, நவமணிப்பலகை இட்டார் - நவ
மணியிழைத்தழுழுழுழுழுத் பலகையொன்று இட்டார்.

     இருவர் - ஆகா, ஊகூ என்னும் கந்தருவர்கள். இவர்கள் பாட்டிற்குப்
பரிசிலாக என்றும் இவர்கள் தோட்டின் வடிவாக விருந்து பாடும்படி தமது
திருச்செவியைக் காணியாக அளித்தருளினர் என்க. அங்ஙனம் பாடுவார்க்குத்
திருச்செவியையே இடமாக அளித்தவர் இன்று பாணர் சேற்றிலே கால்புதைய
நின்று பாடுதலைப் பார்த்தும் தரித்திரார் என்பது தோன்ற ‘பரிசிலாக்
கொடுத்தசெவியிலூட்டும் தொண்டு கண்டு பலகை யிட்டார் என்றார். (13)