[எழுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
இறையருள்
வரிசை பெற்றபத் திரனு மேறுயர்த் தவரைநாற் போதும்
முறையினால் வழிபட் டொழுகுவா னாக முடிகெழு வரகுண வேந்து
மறைமுத லடிகள் வந்துவந் தனையால் வழுத்துவான் சில்பகல் கழிய
நிறைபெருஞ் சுடரோன் றிருவுரு வடைந்து நெறியினாற் சிவபுர மடைந்தான்.
|
(இ
- ள்.) இறை அருள் வரிசை பெற்ற பத்திரனும் - வரகுண
மன்னன் அருளிய வரிசைகளைப் பெற்ற பாணபத்திரனும், ஏறு உயர்த்தவரை
- இடபக்கொடியினை யுயர்த்திய சோமசுந்தரக் கடவுளை, நாற்போதும் -
நான்கு காலங்களிலும், முறையினால் வழிபட்டு ஒழுகு வானாக - முறைப்படி
வழிபாடு செய்து ஒழுகுவானாக; முடிகெழு வரகுண வேந்து - முடியுடைய
வேந்தனாகிய வரகுண தேவன், மறை முதல் அடிகள் வந்து வந்தனையால்
வழுத்துவான் - வேத முதல்வனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளைத்
(திருக்கோயிலின்கண்) வந்து வணங்கித் துதிப்பானாகி, சில் பகல் கழிய -
சின்னாட்கழிய, நெறியினார் முறைமையால், நிறைபெருஞ் சுடரோன் திரு உரு
அடைந்து - எங்கும் நிறைந்த பேரொலியாகிய இறைவனது திருவுருவத்தை
அடைந்து, சிவபுரம் அடைந்தான் - சிவலோகத்தை அடைந்தான்.
நாற்போது
- காலை, நண்பகல், மாலை, நடுயாமம், வந்தனையால் -
வணங்குவதோடு : ஆல் ஒடுவின் பொருட்டு. வழுத்துவான் : முற்றெச்சம்.
திருவுரு - சாரூபம். (18)
ஆகச்
செய்யுள் - 2148
|