பொய்மையுடைய சமணர்கள்,
கட்டிக் கூறிய சமண மதமாகிய புறநெறியில்
நின்றவனும், கையன் - வஞ்சகனுமாகிய, அவன் - அச்சோழன், மை இல்
மதி மாறனொடு - குற்றமில்லாத சந்திரன் மரபில் வந்த பாண்டியனோடு,
மாறுபட நின்றான் - மாறுபட்டிருந்தான்.
வழிய
- வழியினையுடைய கட்டுரை - புனைந்து கூறிய. ஒருத்தன்
உள்ளான் புறத்துறையில் நின்றானும் கையனுமாகிய அவன் மாறுபட
நின்றான் என முடிக்க. மாறுபட - மாறுபட்டு. (5)
முடங்கன்மதி செஞ்சடை முடித்துவிடை யேறும்
விடங்கரது சேவடி விழுங்கிய மனத்து
மடங்கனிகர் தென்னனெதிர் வந்துபொர லாற்றா
தடங்கலனொர் வஞ்சனையி னாலட மதித்தான். |
(இ
- ள்.) முடங்கல் மதி செஞ்சடை முடித்து - வளைவினையுடைய
பிறையைச் சிவந்த சடையில் முடித்து, விடை ஏறும் - இடபவூர்தியில்
ஏறியருளும், விடங்கரது சேவடி விழுங்கிய மனத்து - அழகராகி
சோமசுந்தரக் கடவுளின் சிவந்த திருவடிகளை உட்கொண்ட
மனத்தினையுடைய, மடங்கல் நிகர் தென்னன் எதிர் வந்து பொரல்
ஆற்றாது - சிங்கத்தை ஒத்த விக்கிரபாண்டியனெதிரே வந்து போர்
செய்தலாற்றாது, அடங்கலன் ஓர் வஞ்சனையினால் அட மதித்தான் -
பகைவனாகிய அச்சோழன் ஒரு வஞ்சனையினாற் கொல்லக் கருதினான்.
விழுங்கிய
- உட்கொண்ட; நன்கு பதித்த. பொரலாற்றாது - போர்
செய்தற்கு வலியின்றி. ஓர் : விகாரம். (6)
[அறுசீரடியாசிரிய
விருத்தம்]
|
அஞ்சனங் கவுஞ்சங் கோவர்த் தனந்திரி கூடங் காஞ்சிக்
குஞ்சரஞ் சைய* மேம கூடமே விந்த மென்னும்
மஞ்சிவர் வரைக ளெட்டும் வைகுறு மமணர் தம்மில்
எஞ்சலில் குரவர்க் கோலை வேறுவே றெபதி விட்டான். |
(இ
- ள்.) அஞ்சனம் கவுஞ்சம் கோவர்த்தனம் திரிகூடம் -
அஞ்சனமும் கிரவுஞ்சமும் கோவர்த்தனமும் திரிகூடமும், காஞ்சிக் குஞ்சரம்
சையம் ஏமகூடம் விந்தம் என்னும் - காஞ்சியிலுள்ள அத்திகிரியும் சையமும்
ஏமகூடமும் விந்தமும் என்று சொல்லப்பட்ட, மஞ்சு இவர் வரைகள் எட்டும்
- முகில்கள் தவழும் எட்டு மலைகளிலும், வைகுறும் அமணர் தம்மில் -
வசிக்கும் சமணர்களுள், எஞ்சல் இல் குரவர்க்கு வேறு வேறு ஓலை
எழுதிவிட்ட குறைதலில்லாத ஆசிரியராயினோர்க்கு வேறு வேறாக ஓலை
எழுதி அனுப்பி
. அஞ்சனம்
- நீலவெற்பு. கவுஞ்சம், வடற்சொற் சிதைவு. அத்தி
வெற்பினைப் பரியாயப் பெயராற் குஞ்சரம் என்றார். எஞ்சல் இல் -
மிக்க தொகையினையுடைய. (7)
(பா
- ம்.) * காஞ்சி குஞ்சர சையம்.
|