II


இசைவாதுவென்ற படலம்431



கின்னரர் - இசைபாடும் ஒரு தேவ சாதியார். நின்றாள் அங்ஙனம்
நின்றவளை நோக்கி என விரித்துரைக்க. (5)

பத்தி ரன்மனைவி தன்னையெம் முன்னர்ப்
பாடு தற்கழை யதற்கவ ளாற்றா
துத்த ரஞ்சொலினும் யாமவள் சார்பா
யுனைவி லக்கினும் விடாது தொடர்ந்தே
சித்த நாணமுற வஞ்சின மிட்டுச்
செல்லனில் லென வளைந்துகொ ளென்னா
எய்த்த நுண்ணிடையி னாளை யிருக்கைக்
கேகி நாளைவரு கென்று விடுத்தான்.

     (இ - ள்.) பத்திரன் மனைவிதன்னை எம்முன்னர் - பாணபத்திரன்
மனைவியை எமது முன்னே, பாடுதற்கு அழை - பாடுதற்கு அழைப்பாயாக,
அதற்கு அவள் ஆற்றாது உத்தரம் சொலினும் - அதற்கு அவள் உன்னோடு
பாட ஆற்றாமல் வேறு போக்குச் சொல்லினும், யாம் அவள் சார்பாய் உனை
விலக்கினும் - யாம் அவள் சார்பாய் இருந்து உன்னைத் தடுத்தாலும். விடாது
தொடர்ந்தே - நீ அவளை விடாது பின்பற்றி, சித்தம் நாணம் உற - அவள்
மனம் வெள்குமாறு, வஞ்சினம் இட்டு - சூளுறவுசெய்து, செல்லல் நில் என
வளைந்துகொள் என்னா - செல்லாதே நில் என்று வளைந்து கொள்வாயாக
என்று கூறி, எய்த்த நுண் இடையினாளை - இளைத்த நுண்ணிய
இடையினையுடைய அப்பாடினியை, இருக்கைக்கு ஏகி நாளை வருக என்று
விடுத்தான் - இருப்பிடஞ் சென்று நாளை வரக்கடவாய் என்று அனுப்பினான்.

     செல்லல் - செல்லாதே; அல் விகுதி எதிர் மறையில் வந்தது.
வருகென்று : அகரந் தொக்கது. (6)

[கலிநிலைத்துறை]
பின்ன ரின்னிசைப் பத்திரன் பெருந்தகை விறலி
தன்னை யங்கழைத் துளத்தொன்று புறத்தொன்று சாற்றும்
என்னொ டின்னிசை பாடுவா ருளர்கொலோ விங்கென்
றுன்னி வந்திருக் கின்றன ளிசைவலா ளொருத்தி.

     (இ - ள்.) பின்னர் - பின்பு, இன் இசைப் பத்திரன் பெருந்தகை
விறலிதன்னை - இனிய இசைபாடுதலில் வல்ல பாணபத்திரன் மனைவி
யாகிய மிக்க கற்பினையுடைய பாடினியை, அங்கு அழைத்து - தன்முன்
அழைத்து, உளத்து ஒன்று புறத்து ஒன்று சாற்றும் - அகத்தொன்றும்
புறத்தொன்றுமாகக் கூறுகின்றான்; இசைவலாள் ஒருத்தி - இசையில்
வல்ல ஒரு பொண், உன்னி - தன்னை நன்கு மதித்தமையால், இங்கு என்னொடு