என்னுஞ் செய்யுளா
லறிக. குணங்களாவன : மேற்கூறிய குற்றங்க ளொழிந்த
கொன்றை, கருங்காலி முதலிய மரங்களால் இயன்றிருப்பனவாகும்;
"சொல்லிய
கொன்றை , கருங்காலி மென்முருக்கு
நல்ல குமிழுந் தணக்குடனே - மெல்லியலாய்
உத்தம மான மரங்க ளிவையென்றார்
வித்தக யாழோர் விதி" |
என்பது காண்க. யாழ்க்கோல்
- யாழாகிய கோல். தெய்வம் - விசு
வாமித்திரன் முதலாகக் கூறுவர். என்னோடு என்பது விகார மாயிற்று. (11)
இருமை யும்பெறு
கற்பினா ளியம்புவாள் கலத்தின்
வரும ரும்பெறற் கல்வியும் வாதின்மே லூக்கப்
பெருமை யும்பலா விரும்புறு பொண்மையின் செருக்குந்
திரும கன்சபை யறியவாய் திறக்கவேண் டாவோ. |
(இ
- ள்.) இருமையும் பெறுகற்பினாள் இயம்புவாள் - இம்மைப்
பயனையும் மறுமைப் பயனையும் அடைதற்குரிய கற்பினையுடையாள்
கூறுவாள்; கலத்தின் வரும் பெறல் அருங்கல்வியும் - மரக்கலத்தினின்றும்
வந்த பெறுதற்குரிய கல்வியினையும், வாதின்மேல் ஊக்கப் பெருமையும் -
வாதின்மேற் சென்ற மனவெழுச்சியின் பெருமையினையும், பலர் விரும்புறு
பெண்மையின் செருக்கும் - பலரும் விழைகின்ற பெண்ணலத்தின்
செருக்கினையும், திருமகன் சபை அறிய - பாண்டியனது அவையிலுள்ளார்
அறியுமாறு, வாய் திறக்க வேண்டாவோ - உன் வாயினைத் திறந்து காட்ட
வேண்டாமா?
கலத்தின்
வருங்கல்வி என உடையாள் தொழில் உடைமை மேல்
ஏற்றிக் கூறப்பட்டது. கற்பின் றன்மை வாய்க்கப் பெறாதாள் என்பாள்
பலர் விரும்புறு பெண்மையின் செருக்கும் என்றாள். பெண்டிர்க்குரிய
நாண் சிறிதுமின்றி அரசவையில் இங்ஙனம் பேசுகின்றாய் என்பாள்
சபை யறியவாய் திறக்க வேண்டாவோ, என்று பாடினி கூறினாள் என்க.
(12)
நெய்யுண்
பூங்குழன் மடவரா னின்னொடும் வாது
செய்யும் பூசலுக் கெதிரலாற் றீயவாய் திறந்து
வையும் பூசலுக் கெதிரலேன் மானம்விற் றுன்போல்
உய்யும் பாவைய ரேயதற் கெதிரென வுரைத்தாள். |
(இ
- ள்.) நெய் உண் பூங்குழல் மடவரால் - நெய் பூசிய மலர்களை
யணிந்த கூந்தலையுடைய பெண்ணே, நின்னொடும் வாது செய்யும் பூசலுக்கு
எதில் அலால் - நின்னோடும் இசைவாது செய்யும் போருக்கு நான் எதிரே
அல்லாமல், தீயவாய் திறந்து வையும் பூசலுக்கு எதிர் அலேன் - கொடிய
வாயினைத் திறந்து இகழும் போருக்கு எதிரல்லேன்; உன்போல் - உன்னைப்
|