II


இசைவாதுவென்ற படலம்435



போல, மானம் விற்று உய்யும் பாவையரே - மானத்தை விற்றுப் பிழைக்கும்
மகளிரே, அதற்கு எதிர் என உரைத்தாள் - அப்பூசலுக்கு எதிராவார் என்று
கூறினாள். மடவரல் என்பது விளியில் மடவரால் என்றாயது. பூசல் - போர்.
மானம் விற்று உன்போல் உய்யும் பாவையர் என்றதனால் நீ மானத்தை
விற்றுப் பிழைக்க வந்துளாய் என்றவாறாயிற்று. (13)

வென்றி மீனவன் விலக்குவான் போலெதிர் விலக்கித்
துன்று தார்க்குழன் மடந்தைமீர் பாடுமின் றோற்றோர்
வென்ற மாதரார்க் கடிமையாய் விடுவதே சபதம்
என்று மானமுண் டாக்கலு மீழநாட் டாவை.

     (இ - ள்.) வென்றி மீனவன் - வெற்றியையுடைய பாண்டியன்,
விலக்குவான்போல் - விலக்குகின்றவனைப்போல் அவிநயித்து, எதிர்
விலக்கி - எதிர் நின்று தடுத்து, துன்று தார்க்குழல் மடந்தைமீர் - நெருங்கிய
மாலையை யணிந்த கூந்தலையுடைய மங்கைமீர், பாடுமின் - (நீவிர்
இப்பூசலைஒழித்துப்) பாடுவீர்களாக; தோற்றோர் - அவ்விசையில் தோற்றவர்,
வென்ற மாதரார்க்கு அடிமையாய் விடுவதே - வெற்றிபெற்ற மடந்தைக்கு
அடிமையாகி விடுவதே, சபதம் என்று மானம் உண்டாக்கலும் - சூளுறவாவது
என்று கூறி இருவருக்கும் மானத்தை மூட்டிய வளவில், ஈழநாட்டு அரிவை -
ஈழ நாட்டினின்றும் போந்த அரிவை.

     நடுவு நிலையுடன் அவர்கள் பூசனை விலக்கினானல்லன் என்பார்
‘விலக்குவான்போ லெதிர்விலக்கி’ என்றார். (14)

முந்தி யாழிடந் தழீஇக்குரல் வழிமுகிழ் விரல்போய்
உந்த வேபெரு மிதநகை யுட்கிடந் தரும்பச்
சந்த வேழிஐச யிறைமகன் றாழ்செவிக் கன்பு
வந்த காதலாண் மழலையி னமுதென வார்த்தாள்.

     (இ - ள்.) முந்தி - தான் முற்பட்டு, யாழ்இடம் தழீஇ, யாழனை
இடத்தோளிற் றழுவி, குரல்வழி முகிழ்விரல்போய் உந்த - குரல் என்னம்
நரம்பின்வழியே முகிழ்த்த விரல்சென்று தாக்கவும், பெருமித நகை உள்
கிடந்து அரும்ப - பெருமிதத்தை வெளிப்படுத்தும் புன்னகை உள்ளே
கிடந்து சிறிது தோன்றவும், சந்த ஏழ்இசை - பண்ணமைந்த ஏழிசைகளையும்,
இறைமகன் தாழ் செவிக்கு - பாண்டி மன்னனது வார்ந்து நீண்ட காதில்,
அன்பு வந்த காதலாள் - அன்பு வளர்தற் கேதுவாகிய காதல் காட்டும்
அவனது காமக் கிழத்தியின், மழலை இன் அமுது என வளர்த்தாள் -
இளஞ்சொல்லாகிய இனிய அமுதம் வாக்கினான்.

     அன்புவந்த காதலாள் - அன்பு வளர்தற் கேதுவாகிய காதலைச்
செய்பவள்; காமக்கிழத்தி. காமக்கிழத்தியின் இளஞ்சொற்போலவும் அமுதம்
போலவும் எனலுமாம். செவிக்கு - செவிக்கண். (15)