II


436திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



வீணை வாங்கினண் மாடக முறுக்கினள் விசித்து
வாண ரம்பெறிந் திருசெவி மடுத்தன ரியக்கர்
நாண மெல்விர னடைவழி நாவிளை யமுதம்
பாணர் கோமகன் விறலியும் பலர்செவி நிறைத்தாள்.

     (இ - ள்.) பாணர் கோமகன் விறலியும் - பாணர் பெருமானாகிய
பத்திரன் மனைவியாகிய பாடினியும், வணை வாங்கினள் மாடகம் முறுக்கினள்
- யாழனை எடுத்து மாடகத்தை முறுக்கி, விசித்து வாள்நரம்பு எறிந்து -
கட்டமைத்து ஒள்ளிய நரம்பினைத் தாக்கி, இயக்கர் இருசெவி மடுத்தனர்
நாண - இயக்கர்களும் இரண்டு செவிகளிலுங் கேட்டு வெள்க, மெல்விரல்
நடைவழி - மெல்லிய விரல் நடத்துதலா லுண்டாகும் ஓசையின் வழியே,
நாவிளை அமுதம் - தனது நாவால் விளைக்கும் இசை யமுதத்தை, பலர்
செவி நிறைத்தாள் - பலர் செவிகளிலும் நிரப்பினாள்.

     வாங்கினள், முறுக்கினள், மடுத்தனர் என்பன முற்றெச்சம். விரல்
நடைவழி நாவிளை அமுதம் - யாழினிசையோடு பொருந்த மிடற்றாற் பாடும்
இசை. விறலியும் வாங்கி முறுக்கி விசித்து எறிந்து நாண அமுதம் நிறைத்தாள்
என வினைமுடிக்க. விறிலியும் என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சப்
பொருட்டு. (16)

அரச னுட்கிடை யறிந்தில ரசைக்களத் துள்ளார்
விலைசெய் வார்குழற் பாடினி பாடலை வியந்தார்
புரைசை மானிரைப் பூழிய னிலங்கையிற் போந்த
வரைசெய் குங்குமக் கொங்கையாள் பாடலை மகிழ்ந்தான்.

     (இ - ள்.) அவைக் களத்து உள்ளார் - அவையிலுள்ள அனைவரும்,
அரசன் உட்கிடை அறிந்திலர் - மன்னனது மனக்கருத்தை யறியாது,
விரைசெய் வார்குழல் பாடினி பாடலை வியந்தார் - மணங் கமழ்கின்ற நீண்ட
கூந்தலையுடைய விறலியின் பாடலைக் கொண்டாடினார்; புரசை மான் நிரைப்
பூழியன் - கழுத்துக் கயிற்றினை யுடைய யானைக் கூட்டங்களையுடைய
பாண்டியன், இலங்கையில் போந்த - இலங்கையினின்றும் வந்த, வரைசெய்
குங்குமக் கொங்கையான் பாடலை மகிழ்ந்தான் - மலையை ஒத்த குங்மக்
குழம்பணிந்த கொங்கையை யுடைய ஈழப் பாடினியின் பாடலைப்
பாராட்டினார்.

     அறிந்திலர் : முற்றெச்சம். புரைசை; இடைப்போலி. புரசை
யானைக்கழுத்திடு கயிறு. வரைசெய், செய் : உவமப்பொருட்டு. (17)

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
தென்னவ னுட்கோ ளெல்லை தெரிந்தன ரவையத் துள்ளார்
அன்னவன் புகழ்ந்த வாறே புகழ்ந்தன ரவளைத் தானே
முன்னவ னருளைப் பெற்று மும்மையுந் துறந்தோ ரேனும்
மன்னவன் சொன்ன வாறே சொல்வது வழக்கா றன்றோ.