II


இசைவாதுவென்ற படலம்437



     (இ - ள்.) அவையத்துள்ளார் - அவையலுள்ளவர்கள், தென்னவன் உட்கோள் எல்லை தெரிந்தனர் - பாண்டியன் உள்ளக்கிடையின் முடிவைத் தெரிந்து, அன்னவன் புகழ்ந்தவாறே - அவன் புகழ்ந்த வண்ணமே, அவளைத் தானே புகழ்ந்தனர் - அவ்வீழப் பாடினியின் பாடலையே புகழ்ந்தார்கள்; முன்னவன் அருளைப் பெற்று - இறைவனது திருவருளைப் பெற்று, மும்மையும் துறந்தோரேனும் - மூவாசைகளையுந் துறந்த பெரியாராயினும், மன்னவன் சொன்னவாறே சொல்வது வழக்காறு அன்றோ - அரசன் கூறியவாறே கூறுவது வழக்காறு அல்லவா.

     மும்மை - மண்ணாசை, பெண்ணாசை, என்னும் மூவாசைகள். மன்னவன் சொன்னவாறே சொல்வது வழக்காறு என்பதனை,

"இகழி னிகழ்ந்தாங் கிறைமக னொன்று
புகழினு மொக்கப் புகழ்ப"

என்பதனாலு மறிக. தெரிந்தனர் : முற்றெச்சம். தான் : ஏ, அசைகள். இச்செய்யுள் வேற்றுப்பொருள்வைப்பணி. (18)

பொன்றளி ரனையாண் மையற் புதுமது நுகர்ந்து தீது
நன்றறி யாத கன்னி நாடவ னவையை நோக்கி
இன்றொரு நாளிற் றோரத் தக்கதோ விதுவென் றந்த
வென்றடு வேற்க ணாரைப் போமென விடுத்தான் மன்னோ.

     (இ - ள்.) பொன் தளிர் அனையாள் - பொன் தளிர்த்தாலொத்த மேனியை யுடைய காமக்கிழத்தி மேல்வைத்த, மையல் புதுமது நுகர்ந்து - காமமாகிய புதிய நறவினைப் பருகியதால், தீது நன்று அறியாத கன்னி நாடவன் - தீமையையும் நன்மையையும் அறியமாட்டாத கன்னி நாட்டினையுடைய பாண்டியன், அவையை நோக்கி - அவையிலுள்ளாரைப் பார்த்து, இது - இவ்விசை வாதின் முடிபு, இன்று ஒரு நாளில் - இன்று ஒரே நாளில், தேரத்தக்கதோ என்று - ஆராய்ந்தறியத் தக்கதோ என்று கூறி,
அந்த வென்று அடுவேல் கணாரை - வென்று பகைவரைக் கொல்லும்
வேல்போன்ற கண்களையுடைய இம்மடவார்களை, போம் என விடுத்தான் -
இருக்கைக்குப் போவீராக என்று அனுப்பினான்.

     பொன்னினது தளிர் என்றுமாம்; இதற்குப் பொற்றளிர் என்பது மெலிந்து நின்றதாகக் கொள்க. புது மது - மயக்கஞ் செய்வதிற் புதுமை யுடைய தொரு மது. காமம் மதுப்போல்வதென்பது,

"கள்ளுண்டல் காம மென்ப கருத்தறை போக்குச் செய்வ"

என முன் கூறப்பட்டவாறும் காண்க. மன்னும் ஓவும் அசைகள். (19)

மருவிய வாய மேத்த விருந்தினாண் மனைவந் தெய்திப்
புரவலன் றனது பாட்டைப் புகழ்ந்ததே புகழ்ந்த தாகப்
பெருமிதந் தலைக்கொண் டானாப் பெருங்களிப் படைந்து
                                         மஞ்சத்
திருமல ரணைமே லார்வந் திளைத்தினி திருந்தா ளிப்பால்.