II


438திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) மருவிய ஆயம் ஏத்த - தன்னைச் சூழ்ந்த மகளிர் கூட்டம்
புகழ, விருந்தினாள் - புதிதாக வந்த ஈழப்பாடினி, மனைவந்து எய்தி - தன்
விடுதி வந்தடைந்து, புரவலன் - இராசராச பாண்டியன், தனது பாட்டைப்
புகழ்ந்ததே புகழ்ந்ததாக - தன் பாட்டினை வியந்ததனையே ஒரு
புகழ்ச்சியாகக் கருதி, பெருமிதம் தலைக்கொண்டு - இறுமாப்பு மேற்கொண்டு,
ஆனாப் பெருங்களிப்பு அடைந்து - நீங்காத பெருஞ் செருக்குற்று, மஞ்சத்
திருமலர் அணைமேல் - தூங்குமஞ்சத்திற் பரப்பிய அழகிய
மலர்ப்படுக்கையின்மேல், ஆர்வம் திளைத்து இனிது இருந்தாள் -
மகிழ்ச்சிமிக்குக் கவலையின்றி இருந்தாள், இப்பால் - பின்.

     அரசன் நெறி திறம்பித் தன்னைப் புகழ்ந்தது உண்மைப் புகழ்ச்சி
யன்றாகவும் அதனைப் புகழ்ச்சியாகக் கொண்டாள் என்பார் ‘புகழ்ந்ததே
புகழ்ந்ததாக’ என்றார். மஞ்சம் - கட்டில். (20)

வணங்குறு மருங்கிற் கற்பின் மடவரன் மதங்கி தானும்
அணங்கிறை கொண்ட நெஞ்ச ளங்கயற் கண்ணி பாகக்
குணங்குறி கடந்த சோதி குரைகழ லடிக்கீ ழெய்தி
உணங்கினள் கலுழ்கண் ணீர ளொதுங்கிநின் றிதனைச் சொன்னான்.

     (இ - ள்.) வணங்குறு மருங்கின் கற்பின் - வளையும் இடையினையும்
கற்பினையுமுடைய, மடவரல் மதங்கிதானும் - பாணபத்திரன் மனைவி யாகிய
பாடினியும், அணங்கு இறைகொண்ட நெஞ்சள் - துன்பங் குடி கொண்ட
நெஞ்சினையுடையளாய், அங்கயற் கண்ணிபாகம் - அங்கயற் கண்ணம்மையை
ஒருபாகத்திலுடைய, குணம் குறிகடந்த சோதி - குணத்தையுங் குறையையும்
கடந்து நின்ற ஒளிவடிவினனாகிய சோம சுந்தரக் கடவுளின், குரைகழல்
அடிக்கீழ் எய்தி - ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த திருவடிக்கீழ் அடைந்து,
உணங்கினள் - வாட்டமுற்று, கலுழ் கண்ணீரள் - கலங்கியழுங்
கண்ணீரையுடையவளாய், ஒதுங்கிநின்று இதனைச் சொன்னாள் - ஒருபுற
மொதுங்கி நின்று இதனைக் கூறுவாளாயினள்.

     அணங்கு - வருத்தம். இறைகொள்ளல் - தங்குதல். உணங்கினள்
என்னும் தெரிநிலை முற்றும் நீரள் என்னும் குறிப்புமுற்றும் எச்சமாயின. (21)

தென்னவ னாகி வையஞ் செய்யகோல் செலுத்திக் காத்த
மன்னவ வழுதி வார வழிவழக் குரைப்ப தானான்
அன்னவன் கருத்துக் கேற்ப வவையரு மனைய ரானார்
பின்னடு நிலைமை தூக்கிப் பேசுவார் யாவ ரையா.

     (இ - ள்.) தென்னவனாகி - சுந்தர பாண்டியனாகி, வையம் செய்ய
கோல் செலுத்திக் காத்த மன்னவ - நிலவலகைச் செங்கோ லோச்சிப்
புரந்தருளிய மன்னவனே, வழுதி - இராசராச பாண்டியன், வாரவழி வழக்கு
உரைப்பதானான் - அன்பு சென்ற வழியே வழக்குப் பேசுவானாயினன்;
அன்னவன் கருத்துக்கு ஏற்ப - அவன் உட்கோளுக் கிசைய, அவையரும்
அனையர் ஆனார் - அவையிலுள்ளாரும் அத் தன்மையாராயினார்; பின் -