இங்ஙனமாயபின், ஐயா
நடுநிலைமை தூக்கிப் பேசுவார் யாவர் - ஐயனே!
நடுநிலைமையினின்று ஆராய்ந்துரைப்பார் யாவருளர்?
வாரவழி
- பட்சபாதம் : ஒருபக்கம் அன்புடையனாய் அழிவழக்
குரைப்பதனான் எனலுமாம். நின்னையன்றி வேறுயாரும் இல்லையென்பாள்
பேசுவார் யாவரையா என்றாள் என்க. (22)
உன்னருட் டுணை*செய் தென்பா லுறுகணோய் துடைப்ப தென்ன
மின்னனாய் நீயே நாளை வெல்லுமா செய்து மஞ்சேல்
என்னவா காய வாணி யீறிலா னருளாற் கேட்டு
மன்னருங் கற்பி னாடன் மனைபுகுந் திருந்தாண் மன்னோ. |
(இ
- ள்.) உன் அருள் துணைசெய்து - உனது திருவருளாகிய
துணையை நல்கி, என்பால் உறுகண் நோய் துடைப்பது என்ன - என்
பாலுள்ள துன்ப நோயைப் போக்கக் கடவாய் என்று குறையிரப்ப, ஈறு
இலான் அருளால் - அழிவில்லாத இறைவன் திருவருளால், ஆகாயவாணி -
அசரீரி, மின் அனாய் மின் போல்வாய், நீயே நாளை வெல்லுமா செய்தும் -
நாளை நீயே வெல்லுமாறு செய்வோம், அஞ்சேல் - நீ அஞ்சற்க, என்ன -
என்று கூற, கேட்டு - அதனைக் கேட்டு, மன அருங் கற்புனாள் தன் மனை
புகுந்து இருந்தாள் - நிலைபெற்ற அரிய கற்பினை யுடைய விறலி தன்
இல்லிற்சென்று இருந்தாள்.
உன்னரு
டுணைசெய்து என்னும் பாடத்திற்கு உன்னருளே துணை
செய்து துடைப்பதாகும் என்றுரைக்க. முற்பொருளில் துடைப்பது வியங்கோள்;
"மறப்ப தறிவிலென் கூற்றுக்களே" என்புழிப் போல, மன், ஓ : அசைகள். (23)
அன்றுபோன் மற்றை ஞான்று மழைத்தனன் பாடல் கேட்டுக்
குன்றுபோற் புயத்தா னென்னற் கூறிய வாறே கூற
மன்றுளார் பலரு மன்ன வண்ணமே சொன்னார் கேட்டு
நின்றபாண் மடந்தை பாண்டி நிருபனை நோக்கிச் சொல்வான். |
(இ
- ள்.) குன்றுபோல் புயத்தான் - மலைபோலுந் தோளினை யுடைய
பாண்டியன், அன்றுபோல் மற்றை ஞான்றும் - அன்று போலவே அடுத்த
நாளும், அழைத்தனன் பாடல் கேட்டு - அவ்விட் விறலிகளையும்
அழைப்பித்து அவர்கள் பாடல் கேட்டு, நென்னல் கூறியவாறே கூற -
நேற்றுப் புகன்ற வண்ணமே புகல, மன்றுளார் பலரும் அன்ன வண்ணமே
சொன்னார் - அவையிலுள்ள அனைவரும் அவ்வரசன் கூறியவாறே கூறினார்;
கேட்டு நின்ற பாண் மடந்தை - இதனைக் கோடு (மனம் புழுங்கி) நின்ற
பாடினி, பாண்டி நிருபனை நோக்கிச் சொல்வாள் - பாண்டி வேந்தனைப்
பார்த்துக் கூறுவாளாயினள்.
அழைத்தனன்
: முற்றெச்சம். (24)
(பா
- ம்.) * உன்னருடுணை.
|