[கலி
விருத்தம்]
|
தென்ற
னாடனு மந்திரச் செல்வரும்
நன்று தீதுணர் நால்வகைக் கேள்வியோர்
ஒன்ற வேகி யொளிவிடு வெள்ளிமா
மன்ற வாணம்ா மண்டபத் தெய்தினார். |
(இ
- ள்.) தென்றல் நாடனும் - தென்றற்காற்றின் பிறப்பிடமாகிய
பொதியின் மலையையுடைய பாண்டிநாடனும், மந்திரச்செல்வரும் -
அமைச்சர்களும், நன்று தீது உணர் - (இருவகை இசையின்) குணத்தினையும்
குற்றத்தையும் அறிதற் கேதுவாகிய, நால்வகைக்கேள்வியோர் ஒன்ற - கீத
ஞான முதலிய நால்வகைஞானமுடையார் சூழ, ஏகி - சென்று, ஒளி விடு
வெள்ளிமாமன்ற வாணர் - ஒளி வீசுகின்ற பெரிய வெள்ளி யம்பல வாணரது,
மாமண்டபத்து எய்தினார் - பெரிய மண்டபத்தை அடைந்தனர்.
நால்வகைக்கேள்வி
- கீதஞானம், இலயஞானம், சுருதிஞானம்,
தாளஞானம் என்பனவாம். (27)
எய்தி யம்மட
மாதரை யிங்குறச்
செய்தி ரென்னத் திருமக னேவலோர்
நொய்தி னோடி நொடித்தழைத் தாரொடு
மைதி கழ்ந்த விழியார் வருவரால். |
(இ
- ள்.) எய்தி - அங்ஙனம் அடைந்து, திருமகன் - பாண்டி
மன்னன், அம்மடமாதரை இங்குறச் செய்திர் என்ன - அந்த
இளமையையுடைய விறலிகளை இங்கு வரச்செய்மின் என்று கட்டளையிட.
நொய்தின் ஓடி நொடித்து - விரைந்து ஓடி மன்னன் கட்டளையைக் கூறி,
ஏவலோர் அழைத்தாரொடு - அழைத்தா ராகிய அவ்வேவலாளருடன்,
மைதிகழ்ந்த விழியார் வருவர் - மைவிளங்கிய விழியினை யுடைய
அவ்விருவரும் வருவாராயினர்.
செய்திர்,
த் எழுத்துப்பேறு. நொடித்து - கூறி, ஏவலோர் அழைத்தார்
அங்ஙனம் அழைத்தவாரே என விரித்துரைக்க. ஆல் : அசை. (28)
படிமை யார்தவப்
பாடினி வந்தெனக்
கடிமை யாவளின் றையமின் றாலெனக்
கொடுமை யார்மனக் கோட்டச் செருக்கொடுங்
கடுமை யாகவந் தாள்கலத் தின்வந்தாள். |
(இ
- ள்.) கலத்தின் வந்தாள் - மரக்கலத்தில் வந்த பாடினி, இன்று
தவப்படிமை ஆர் பாடினி வந்து - இன்று தவவேடம் நிறைந்த விறலி வந்து,
எனக்கு அடிமையாவள் - எனக்கு அடிமையாவாள், ஐயம் இன்று என -
இதற்கு ஓர் ஐயுறவில்லை என்று கருதி, கொடுமை ஆர் கோட்டம்
மனச்செருக்கொடும் - கொடுமை நிறைந்து நெறி பிறழ்ந்த மனத்தின் கண்
உள்ள செருக்கோடும், கடுமையாக வந்தாள் - விரைவாக வந்தனள்.
|